- Advertisement -
வழக்கமான முறையில் பூண்டு குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாறுதலான சுவையில் ஈசியாக செய்யக்கூடிய. அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பூண்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் பூண்டு சாதம் செய்வது எப்படி ?
- Advertisement -
அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பூண்டு குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சுவையான பூண்டு குழம்பு | Poondu Kulambu Recipe in Tamil
வழக்கமான முறையில் பூண்டு குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாறுதலான சுவையில் ஈசியாக செய்யக்கூடிய. அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பூண்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Yield: 4 People
Calories: 113kcal
Equipment
- 1 கடாய்
- 2 பவுள்
தேவையான பொருட்கள்
- 30 பல் பூண்டு
- 15 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி நறுக்கியது
- 2 Tsp குழம்பு மிளகாய் தூள்
- 1/2 Tsp மஞ்சள் தூள்
- 3 கப் புளி கரைசல் நெல்லிக்காய் அளவு புளி
- 3 tbsp நல்லெண்ணெய்
- 1 Tsp கடுகு
- 1/2 Tsp வெந்தயம்
- 1 கொத்து கருவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
- முதலில் புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.புளியை கரைத்த கலவையில் குழம்புதூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும்.
- வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பூண்டு சிறியதாக இருந்தால் கட் செய்ய தேவையில்லை.
- கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும.
- தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி அடுப்பில் சிறு தீயில் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.சுவையான பூண்டு குழம்பு ரெடி.
Nutrition
Serving: 600G | Calories: 113kcal | Carbohydrates: 6g | Protein: 10g | Fat: 1.5g | Sodium: 2.5mg | Potassium: 406mg | Fiber: 2g | Sugar: 0.1g | Iron: 1.5mg