Advertisement
சைவம்

ருசியான பூண்டு மிளகு சீரக ரசம் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

இன்று நாம் சுவையான பூண்டு மிளகு சீரக ரசம் வைப்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இப்படி ஒரு முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த பூண்டு மிளகு ரசம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் தனியாக ஒரு டம்ளரில் ஊற்றி குடிப்பார்கள், அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையால் இருக்கும். உங்கள் வீட்டில் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இருந்தார்கள்

இதையும் படியுங்கள் : அரிசி அலசிய தண்ணீரில் சுவையான ரசம் செய்வது எப்படி ?

Advertisement

என்றால் அவர்களுக்கு சோறை சற்று குழைவாக வடித்து பூண்டு மிளகு சீரக ரசம் வைத்து அதனுன் பிசைத்துக் கொடுத்தால் காய்ச்சல், உடல் வலி, சோர்வு அனைத்தும் அவர்களை விட்டு விலகும். அந்த அளவிற்கு மருத்துவ குணமும் வாய்ந்தது. அதனால் இன்று இந்த பூண்டு மிளகு சீரகசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பூண்டு மிளகு ரசம் | Poondu Milagu Rasam Recipe in Tamil

Print Recipe
இப்படி ஒரு முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த பூண்டு மிளகு ரசம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் தனியாக ஒரு டம்ளரில் ஊற்றி குடிப்பார்கள், அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையால் இருக்கும். உங்கள் வீட்டில் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இருந்தார்கள் என்றால் அவர்களுக்கு சோறை சற்று குழைவாக வடித்து பூண்டு மிளகு சீரக ரசம்
Advertisement
வைத்து அதனுன் பிசைத்துக் கொடுத்தால் காய்ச்சல், உடல் வலி, சோர்வு அனைத்தும் அவர்களை விட்டு விலகும். அந்த அளவிற்கு மருத்துவ குணமும் வாய்ந்தது
Course dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Rasam, ரசம்
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 3 People
Calories 72

Equipment

  • 1 கடாய்
  • 1 தாளிப்பு கரண்டி
  • 1 பவுள்

Ingredients

  • 6 பல் பூண்டு
  • 2 tbsp நெய்
  • புளி எலுமிச்சை அளவு
  • 1 tsp கடுகு
  • 1 tsp மிளகு
  • 1 tsp துவரம் பருப்பு
  • 1 tsp சீரகம்
  • 1/2 tsp பெருங்காய தூள்
  • 1 கொத்து மல்லி, கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றி, நெய் காய்ந்ததும் அதில் நாம் தை்திருக்கும் பூண்டு, மிளகு, சீரகம், துவரம்பருப்பை சேர்த்து வறுக்கவும்.
  • பின் வறுத்த பொருட்களை நன்கு குளிர வைத்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைக்கவும்.
  • அதன் பின் நாம் வைத்திருக்கும் புளியை கரைத்து பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் ஊற்றவும். இதனுன் வறுத்து அரைத்த பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • பின் ரசம் நன்கு கொதித்து வந்ததும் கொத்த மல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும். பின் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைக்கவும்.
  • பின் அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து ரசத்துடன் சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பூண்டு மிளகு ரசம் தயார்.

Nutrition

Serving: 500Gram | Calories: 72kcal | Carbohydrates: 5g | Protein: 2g | Fat: 0.2g | Saturated Fat: 0.01g | Sodium: 21mg | Potassium: 623mg | Fiber: 0.5g | Sugar: 0.1g
Advertisement
Prem Kumar

Recent Posts

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

4 நிமிடங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

4 மணி நேரங்கள் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

14 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

16 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

16 மணி நேரங்கள் ago