இன்று நாம் சுவையான பூண்டு மிளகு சீரக ரசம் வைப்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இப்படி ஒரு முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த பூண்டு மிளகு ரசம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் தனியாக ஒரு டம்ளரில் ஊற்றி குடிப்பார்கள், அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையால் இருக்கும். உங்கள் வீட்டில் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இருந்தார்கள்
இதையும் படியுங்கள் : அரிசி அலசிய தண்ணீரில் சுவையான ரசம் செய்வது எப்படி ?
என்றால் அவர்களுக்கு சோறை சற்று குழைவாக வடித்து பூண்டு மிளகு சீரக ரசம் வைத்து அதனுன் பிசைத்துக் கொடுத்தால் காய்ச்சல், உடல் வலி, சோர்வு அனைத்தும் அவர்களை விட்டு விலகும். அந்த அளவிற்கு மருத்துவ குணமும் வாய்ந்தது. அதனால் இன்று இந்த பூண்டு மிளகு சீரகசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பூண்டு மிளகு ரசம் | Poondu Milagu Rasam Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 தாளிப்பு கரண்டி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 6 பல் பூண்டு
- 2 tbsp நெய்
- புளி எலுமிச்சை அளவு
- 1 tsp கடுகு
- 1 tsp மிளகு
- 1 tsp துவரம் பருப்பு
- 1 tsp சீரகம்
- 1/2 tsp பெருங்காய தூள்
- 1 கொத்து மல்லி, கருவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
- முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றி, நெய் காய்ந்ததும் அதில் நாம் தை்திருக்கும் பூண்டு, மிளகு, சீரகம், துவரம்பருப்பை சேர்த்து வறுக்கவும்.
- பின் வறுத்த பொருட்களை நன்கு குளிர வைத்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைக்கவும்.
- அதன் பின் நாம் வைத்திருக்கும் புளியை கரைத்து பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் ஊற்றவும். இதனுன் வறுத்து அரைத்த பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- பின் ரசம் நன்கு கொதித்து வந்ததும் கொத்த மல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும். பின் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைக்கவும்.
- பின் அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து ரசத்துடன் சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பூண்டு மிளகு ரசம் தயார்.