Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க பக்காவான ஸ்நாக்ஸ்!

Advertisement

என்னதான் நிறைய வகையான கிழங்குகள் இருந்தாலும் நாம் சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஒரு கிழங்கு வகை தான் உருளைக்கிழங்கு. பொதுவாக குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் உருளைக்கிழங்கு செய்த பிரெஞ்ச் ப்ரைஸ் உருளைக்கிழங்கு செய்த கட்லட் என உருளைக்கிழங்கு செய்த அனைத்துமே குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் மிகவும் பிடித்தமாக இருக்கும்.

ரசம் வைத்து உருளைக்கிழங்கு வறுத்துக் கொடுத்தால் போதும் அனைவரும் இரண்டு தட்டு சாப்பாடு சாப்பிடுவார்கள் அந்த அளவுக்கு அதனுடைய சுவையை அடித்துக் கொள்ளவே முடியாது. உருளைக்கிழங்கு வைத்து நாம் ஈவினிங் ஸ்நாக்ஸ் நிறைய செய்து கொடுப்போம். ஆனால் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் அற்புதமான ஒரு சுவையில் செய்திருக்க மாட்டோம். அதைத்தான் நாம் என்று எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். சீஸ் மற்றும் உருளைக்கிழங்கு வைத்து செய்யக்கூடிய இந்த ஒரு ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய அருமையான ஒரு ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்.

Advertisement

அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சீஸ் பால் செய்வதற்கு நிறைய நேரங்கள் எல்லாம் தேவைப்படாது மிகவும் குறைவான நேரத்திலேயே சுலபமாக சுவையாக இதனை செய்து முடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வாங்க இப்போ இந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் | Potato Cheese Balls In Tamil

Print Recipe
பொதுவாக ரசம் வைத்து உருளைக்கிழங்கு வறுத்துக் கொடுத்தால் போதும் அனைவரும் இரண்டு தட்டு சாப்பாடு சாப்பிடுவார்கள்அந்த அளவுக்கு அதனுடைய சுவையை அடித்துக் கொள்ளவே முடியாது. உருளைக்கிழங்கு வைத்து நாம்ஈவினிங் ஸ்நாக்ஸ் நிறைய செய்து கொடுப்போம். ஆனால் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் அற்புதமானஒரு சுவையில்
Advertisement
செய்திருக்க மாட்டோம். அதைத்தான் நாம் என்று எப்படி செய்வது என்று பார்க்கப்போகிறோம். சீஸ் மற்றும் உருளைக்கிழங்கு வைத்து செய்யக்கூடிய இந்த ஒரு ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்குமாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய அருமையான ஒரு ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Potato Cheese Balls
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 240

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 கேரட்
  • 1/4 கப் கார்ன்
  • 1/4 கப் சீஸ்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 கப் பிரட் தூள்
  • 1/2 கப் கார்ன் பிளவர்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி மல்லி இலைகள்

Instructions

  • முதலில் இந்த சீஸ் பால்ஸ் செய்வதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் கேரட் கருவேப்பிலை  மல்லி இலைகள் அனைத்தையும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கேரட் கருவேப்பிலை மல்லி இலைகள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
  • தேவையான அளவிற்கு உப்பு, கரம் மசாலா ,மிளகாய் தூள், கார்ன்,சீஸ் என அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்
  • இப்பொழுது கார்ன்பிளவர் மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
  • பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மாவை கான்பிளவர் மாவில் நனைத்து எடுத்து பின்னர் பிரட் தூளில்பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி விரட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒன்றொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்துஎடுத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது சுவையான அருமையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தக்காளி சாஸ் வைத்து சாப்பிடலாம் சுவை அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

4 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

14 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

22 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

2 நாட்கள் ago