நிறைய இடங்களில் மொறுமொறுப்பாக உளுந்து வடைகள் கடைகளில் கிடைக்கும். பாட்டிகள் சுட்டு விற்பனை செய்யும் வடையிலிருந்து வரக்கூடிய வாசமே நம்மை இழுக்கும். மூக்கைத் துளைக்கும். கட்டாயம் இதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று நாக்கு சொல்லும். ஆனால், அடிக்கடி இதை கடையில் வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. வீட்டிலேயே மொறு மொறுப்பாக வடை செய்வது நல்லது. அதிலும் இந்த சாம்பல் பூசணி சேர்த்து செய்யும் வடை மிகவும் ருசியாக இருக்கும் அத்துடன் ஆரோக்கியமானதும் கூட.
மாலை நேரத்தில் சுட சுட டீ யுடன் வடை பஜ்ஜி என ஏதாவது ஸ்நாக்ஸ் இருந்தா ரொம்பவே அருமையாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் வகையிலே மற்ற அனைத்தையும் விட இந்த வடைக்கு எப்போதுமே முதலிடம் தான். அப்படி ஒரு அருமையான டீ டைம் ஸ்நாக்ஸான சாம்பல் பூசணி உளுந்து வடையை நல்ல கிறிஸ்ப்பியா செய்யலாம்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சாம்பல் பூசணி உளுந்து வடை | Pumpkin Urad Vada In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ உளுந்து
- 1/4 பூசணி
- 3 கைப்பிடி கொத்த மல்லி
- 4 கொத்து கறிவேப்பிலை
- 2 பெரிய வெங்காயம்
- 5 பச்சை மிளகாய்
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் உளுந்தை தண்ணீரில் ஊற வைத்து நன்கு பஞ்சு போல அரைத்துக் கொள்ளவும், அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைக்கவும்.
- பிறகு சாம்பல் பூசணியை துருவி அதில் சேர்க்கவும்.
- பின் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பின் உப்பு சேர்த்து பிசையவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த கலவையை தட்டையாக தட்டி பொரித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான சாம்பல் பூசணி உளுந்து வடை தயார்.
- இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இதனை தக்காளி சட்னி மற்றும் சாம்பருடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.