Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸாக சாம்பல் பூசணி உளுந்து வடை இப்படி நம்ம வீட்ல செய்து அசத்தலாம் ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

நிறைய இடங்களில் மொறுமொறுப்பாக உளுந்து வடைகள் கடைகளில் கிடைக்கும். பாட்டிகள் சுட்டு விற்பனை செய்யும் வடையிலிருந்து வரக்கூடிய வாசமே நம்மை இழுக்கும். மூக்கைத் துளைக்கும். கட்டாயம் இதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று நாக்கு சொல்லும். ஆனால், அடிக்கடி இதை கடையில் வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. வீட்டிலேயே மொறு மொறுப்பாக வடை செய்வது நல்லது. அதிலும் இந்த சாம்பல் பூசணி  சேர்த்து செய்யும் வடை மிகவும் ருசியாக இருக்கும் அத்துடன் ஆரோக்கியமானதும் கூட.

மாலை நேரத்தில் சுட சுட டீ யுடன் வடை பஜ்ஜி என ஏதாவது ஸ்நாக்ஸ் இருந்தா ரொம்பவே அருமையாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் வகையிலே மற்ற அனைத்தையும் விட இந்த வடைக்கு எப்போதுமே முதலிடம் தான். அப்படி ஒரு அருமையான டீ டைம் ஸ்நாக்ஸான சாம்பல் பூசணி உளுந்து வடையை நல்ல கிறிஸ்ப்பியா செய்யலாம்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisement

சாம்பல் பூசணி உளுந்து வடை | Pumpkin Urad Vada In Tamil

Print Recipe
மாலை நேரத்தில்சுட சுட டீ யுடன் வடை பஜ்ஜி என ஏதாவது ஸ்நாக்ஸ் இருந்தா ரொம்பவே அருமையாக இருக்கும்.இந்த ஸ்நாக்ஸ் வகையிலே மற்ற அனைத்தையும் விட இந்த வடைக்கு எப்போதுமே முதலிடம் தான்.அப்படி ஒரு அருமையான டீ டைம் ஸ்நாக்ஸான சாம்பல் பூசணி உளுந்து வடையை நல்ல
Advertisement
கிறிஸ்ப்பியாசெய்யலாம்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.வீட்டில் வடை சுட்டு கொடுத்தாலும்,கொஞ்சம் வித்யாசமாக கோஸ் உளுந்து செய்து பாருங்கள். டீக்கடையில் கிடைக்கும் அதே மொறுமொறு கோஸ் உளு‌ந்து வடையை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றிய சூப்பரானரெசிபி இந்த பதிவில் உங்களுக்காக. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி கோஸ் உளுந்துவடை செய்தால் கடையில் கிடைக்கும் மொறுமொறுப்பான வடை நம்ம வீட்லயும் கிடைக்கும்
Advertisement
Course snacks
Cuisine tamilnadu
Keyword Pumpkin Urad Vada
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 350

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/2 கிலோ உளுந்து
  • 1/4 பூசணி
  • 3 கைப்பிடி கொத்த மல்லி
  • 4 கொத்து கறிவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப

Instructions

  • முதலில் உளுந்தை தண்ணீரில் ஊற வைத்து நன்கு பஞ்சு போல அரைத்துக் கொள்ளவும், அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைக்கவும்.
  • பிறகு சாம்பல் பூசணியை துருவி அதில் சேர்க்கவும்.
  • பின் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பின் உப்பு சேர்த்து பிசையவும்.
  •  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த கலவையை தட்டையாக தட்டி பொரித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான சாம்பல் பூசணி உளுந்து வடை தயார்.
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இதனை தக்காளி சட்னி மற்றும் சாம்பருடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 350kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Fat: 0.02g | Sodium: 3mg | Potassium: 55mg | Fiber: 3g | Calcium: 20mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

5 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

24 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

1 நாள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago