ராகி மாவில் கூழ் செஞ்சுருப்போம் கழி செஞ்சிருப்போம். ரெண்டுமே ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். ராகி மாவில் ரொட்டி கூட சுட்டு சாப்பிடுவோம் அதுவும் ரொம்ப அற்புதமான டேஸ்ட்ல இருக்கும். நான் சின்ன வயசுல இருக்கும் போதெல்லாம் என்னோட பாட்டி ஸ்டவ்ல இதை சுட்டுக் கொடுக்கும் போது பக்கத்திலேயே அவங்க சுட்டு தர சுட்டு தர வாங்கி சாப்பிட்டு கிட்டு இருப்போம்.
எந்த அளவுக்கு இதோட வாசனையே நம்மல வேற எங்கேயும் போகலாமா அங்கேயே உட்கார வைத்திருக்கும் அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். நீங்களும் உங்க வீட்ல உங்க குழந்தைகளுக்கு இந்த ராகி ரொட்டியை சுட்டு கொடுங்க இனிப்பா இருக்கிறதால அவங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க நீங்க ராகி ரொட்டி வேற மாதிரியான ஒரு முறையில செஞ்சி இருப்பீங்க ஆனா இப்ப நான் சொல்ற இந்த முறையில ராகி ரொட்டி செஞ்சு பாருங்க ரொம்பவே சூப்பரா இருக்கும்.
குழந்தைகள் ஏதாவது ஈவினிங் ஸ்நாக்ஸ் கேட்டா இந்த ராகி ரொட்டியை செஞ்சு குடுங்க இதை ஈவ்னிங் ஸ்னாக்ஸ் மட்டும் இல்லாம நைட்டுக்கு டின்னர் ஆகவும் காலைல பிரேக்ஃபாஸ்ட் ஆகவும் சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும். ஒரு தடவை இந்த மாதிரி நீங்க செஞ்சுட்டீங்கன்னா போதும் அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இதை செஞ்சு சாப்பிட்டுகிட்டே தான் இருப்பீங்க. அந்த அளவுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். ரொம்பவே ஈசியா குறைவான பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த ராகி ரொட்டி எல்லாரையும் விரும்பி சாப்பிடப்படும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டிலேயே இருக்கிற பொருட்களை வைத்து சூப்பரா இந்த ஸ்னாக்ஸ் செஞ்சிடலாம் இப்ப வாங்க இந்த அருமையான ராகி ரொட்டி ருசியா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
ராகி ரொட்டி | Raagi Rotti Recipe In Tamil
Equipment
- 1 தோசை கல்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் ராகி மாவு
- 3/4 கப் நாட்டுச் சர்க்கரை
- 1 டீஸ்பூன் ஏலக்காய்தூள்
- 15 சின்ன வெங்காயம்
- 1 சிட்டிகை உப்பு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் ராகி மாவு ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை உப்பு நாட்டு சர்க்கரை சிறியதாக நறுக்கிய சின்ன வெங்காயம் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
- அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- ஒரு தோசை கல்லில் பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறு உருண்டையாக எடுத்து ரொட்டி பதத்திற்கு தட்டி தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரு பக்கமும் வேகவைத்து எடுத்தால் சுவையான ராகி ரொட்டி தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : வித்தியாசமான சுவையில் கேழ்வரகு அதிரசம் எப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!