Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ருசியான முள்ளங்கி பொரியல் இனி இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

முள்ளங்கி ஒரு கிழங்கு வகை  காயாகும்.  இந்த முள்ளங்கியில் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இது உடலுக்கு  அதிக நீரிழப்பு ஏற்படுவதௌ தடுக்கிறது. முள்ளங்கியை நிறைய பேர் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால்  முள்ளங்கியில் இருக்கும் சத்துக்கள் அதிகம்  விட்டமின் பி, விட்டமின் கே, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், விட்டமின் இ போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த முள்ளங்கியை உணவில் சேர்த்து வருவதால் சிறுநீரகப்பை கல், நீரிழிவு நோய், இதயம் பலப்படுதல், செரிமான பிரச்சனைகள் , கல்லீரல் பிரச்சனைகள்,  இரத்த அழுத்தத்தை சீராக்கும்,  ஹீமோகுளோபினை அதிகரிக்கும். 

இப்படிப்பட்ட முள்ளங்கியில் சாம்பார், கூட்டு  வைத்து சாப்பிட்டு இருப்போம். முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் குறைகிறது.  இவை வெள்ளை நிற காய்கறிகள் ஆகையால் இதில் கால்சியம் மிக அதிகமாக இருக்கும். அதனால் எழும்பிற்கு பலத்தை கொடுக்கின்றது.  இந்த சுவையான சத்தான முள்ளங்கியை  அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

Advertisement

முள்ளங்கியை மோருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஜூஸாக பருக்கும் பொழுது சிறுநீரகத்தில் உள்ள கல்கள் எல்லாம் சரியாகின்றன. முக்கியமான உறுப்புகளை சரி செய்யும் முள்ளங்கியில் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். இப்படிப்பட்ட முள்ளங்கியை குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த முள்ளங்கியை பொரியலாக செய்து கொடுக்கும் பொழுது வித்தியாசமான சுவையில் மிகவும் விருப்பமாக உண்ணுவார்கள். இந்த முள்ளங்கி  பொரியலை சாம்பார், புளிக்குழம்பு, வத்தல் குழம்பு,ரசம், தயிர்சாதம் போன்றவற்றிற்கு உண்ணலாம். அருமையான சுவையில் எப்போதும் உண்பதை விட சற்று அதிக உணவை எடுத்து கொள்வோம். சுவையான ஆரோக்கியமிக்க முள்ளங்கி பொரியல் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.

முள்ளங்கி பொரியல் | Radish Stir Fry Recipe In Tamil

Print Recipe
முள்ளங்கியை மோருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஜூஸாக பருக்கும் பொழுது சிறுநீரகத்தில் உள்ள கல்கள் எல்லாம் சரியாகின்றன. முக்கியமான உறுப்புகளை சரி செய்யும் முள்ளங்கியில்
Advertisement
பொரியல் எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். இப்படிப்பட்ட முள்ளங்கியை குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த முள்ளங்கியை பொரியலாக செய்து கொடுக்கும் பொழுது வித்தியாசமான சுவையில் மிகவும் விருப்பமாக உண்ணுவார்கள். இந்த முள்ளங்கி  பொரியலைசாம்பார், புளிக்குழம்பு, வத்தல் குழம்பு,ரசம், தயிர்சாதம் போன்றவற்றிற்கு உண்ணலாம். அருமையான சுவையில் எப்போதும் உண்பதை விட சற்று அதிக உணவை எடுத்து கொள்வோம். சுவையான ஆரோக்கியமிக்க முள்ளங்கி பொரியல் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.
Advertisement
Course Side Dish
Cuisine tamil nadu
Keyword Radish Stir Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 19

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ முள்ளங்கி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 3 பச்சை மிளகாய்
  • 4 பல் பூண்டு
  • 12 கப் துருவிய தேங்காய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையானஅளவு

தாளிக்க

  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1/2 கப் வெங்காயம்
  • 1 ஸ்பூன் வெங்காயம்

Instructions

  • முதலில் முள்ளங்கியை தோல் சீவி எடுத்து கழுவி வைத்து கொள்ளவும்.கழுவிய முள்ளங்கியை சதுர வடிவில் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து முள்ளங்கி மூழ்கும் அளவிற்கு நீர்விட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில்  சீரகம்,பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொர கொரப்பாக அரைக்கவும்.
  • பின் வேக வைத்த முள்ளங்கியில் தண்ணீர் முழுவதும் வற்றி முள்ளங்கி நன்றாக வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும். அதில் கொர கொரப்பாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை கடாயில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • தேங்காய் கலவையில் பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த முள்ளங்கியை சேர்த்து நன்றாக கிளறவும்.தேங்காய் கலவையோடு நன்றாக கலந்து வெந்த பிறகு சூடாக பரிமாறினால்  சுவையானஆரோக்கியமிக்க முள்ளங்கி பொரியல்  தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 19kcal | Carbohydrates: 3.9g | Protein: 0.8g | Sodium: 39mg | Potassium: 233mg | Vitamin A: 7IU | Vitamin C: 14.8mg | Calcium: 25mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

2 மணி நேரங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

2 மணி நேரங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

2 மணி நேரங்கள் ago

சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 09 மே 2024!

மேஷம் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும்…

6 மணி நேரங்கள் ago

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

15 மணி நேரங்கள் ago