குழந்தைகள் ஸ்நாக்ஸ்க்கு ஒரு தடவை இந்த மாதிரி ரவா ரோல்ஸ் செஞ்சு கொடுங்க!

- Advertisement -

ரவா ரோல்ஸ் அப்படினா என்னென்னு சில பேருக்கு தெரியாது. ஆவில வேக வச்சு ரொம்ப ஹெல்தியா செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் தான் இந்த ரவா ரோல்ஸ். குழந்தைங்க ஸ்னாக்ஸ் கேட்டாங்க அப்படினா உங்களுக்கு எப்பவுமே எண்ணெயில் பொரிச்சது இனிப்புகள் செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை ஆவில வேக வெச்ச ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுங்க அதுதான் அவங்களுக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. எப்பவுமே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் தான் நம்ம கொடுக்கணும் அந்த வகையில் இந்த ரவா ரோல்ஸ் கண்டிப்பாக ஆரோக்கியமான ஸ்னாக்ஸா இருக்கும்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாம சாப்பிடுவதற்கும் ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். இந்த ரவா ரோல்ஸ் பண்றது ரொம்பவே ஈஸியான ஒன்று தான். மிகவும் குறைவான பொருட்களை வைத்து இந்த ரவா ரோல்ஸ் ஈசியா செஞ்சு முடிச்சிடலாம்.  இந்த ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்குமே ரொம்ப பிடிக்கும்.

- Advertisement -

சில சமயங்களில் இதை ஸ்னாக்ஸ்ஸ மட்டும் இல்லாம காலை உணவாகவும் சாப்பிடலாம். காரம் புளிப்பு அப்படின்னு ரெண்டு சுவையுமே இருக்கக்கூடிய இந்த ரவா ரோல்ஸ் கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான ரவா ரோல்ஸ் ஈசியா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

ரவா ரோல்ஸ் | Rava Rolls Recipe in tamil

 
ரவா ரோல்ஸ் அப்படினா என்னென்னு சில பேருக்கு தெரியாது. ஆவில வேக வச்சு ரொம்ப ஹெல்தியா செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் தான் இந்த ரவா ரோல்ஸ். குழந்தைங்க ஸ்னாக்ஸ் கேட்டாங்க அப்படினா உங்களுக்கு எப்பவுமே எண்ணெயில் பொரிச்சது இனிப்புகள் செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை ஆவில வேக வெச்ச ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுங்க அதுதான் அவங்களுக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. எப்பவுமே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் தான் நம்ம கொடுக்கணும் அந்த வகையில் இந்த ரவா ரோல்ஸ் கண்டிப்பாக ஆரோக்கியமான ஸ்னாக்ஸா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Snack
Cuisine: tamil nadu
Keyword: Rava Rolls
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் ரவை
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 2 பச்சைமிளகாய்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1/2 கப் தயிர்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் எள்
  • இட்லி பொடி தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  •  
    ஒரு பாத்திரத்தில் ரவை பெருங்காயத்தூள் உப்பு தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  • பேசாத நறுக்கிய கொத்தமல்லி இலைகள் நறுக்கிய ஒரு கொத்து கருவேப்பிலை பொடியாக நறுக்கிய இஞ்சி சீரகம் சேர்த்து நன்றாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும் கொஞ்சம் கெட்டியாக கலந்து கொள்ளவும்
  • 10 நிமிடங்களுக்குபிறகு அதில் கடலை மாவு சேர்த்து நிறைய தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கும் மேல் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்
  • ஒரு பெரிய தட்டில் என்னை தடவி அதில் இந்த மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஆரிய பிறகுஅதில் இட்லி பொடியை தூவி விட்டு பிறகு அதனை நீள துண்டுகளாக வெட்டி அதனை அப்படியே ரோல் மாதிரி மடித்து கொள்ளவும்
  • அனைத்தையும் மடித்து எடுத்த பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு எள் ஒரு கொத்து கருவேப்பிலை காய்ந்து மிளகாய் சேர்த்து தாளித்து அதில் சேர்த்து விட்டால் சுவையான ரவா ரோல்ஸ் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg

இதையும் படியுங்கள் : மாலையில் எதாவது சாப்பிட தோன்றினால் கோதுமை வெஜ் மோமோஸ் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க