பச்சரிசி வைத்து இப்படி ஒரு முறை அல்வா செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். அருமையான ருசியில் இருக்கும்!!!     

- Advertisement -

அல்வா என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வாயில் வைத்தால் சட்டென்று கரைந்து விடும் அந்த அளவிற்கு நெய் ஊற்றி பார்க்கவே அழகாக செய்கின்ற இந்த அல்வாவின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். நாம் பலவிதமான அல்வாக்களும் சாப்பிட்டு இருப்போம் உதாரணமாக கேரட் அல்வா முந்திரி அல்வா காசி அல்வா பீட்ரூட் அல்வா கோதுமை அல்வா பாதாம் அல்வா என பலவிதமான அல்வாக்களை சாப்பிட்டு இருப்போம்.

-விளம்பரம்-

ஆனால் பச்சரிசியில் அல்வா செய்த சாப்டு இருக்க மாட்டோம். கடைக்கு போய் எதுவும் வாங்காமல் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து சுலபமான முறையில் நாம் இந்த பச்சரிசி அல்வாவை செய்து முடித்து விடலாம். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும் நேரத்தில் வீட்டில் எதுவும் ஸ்னாக்ஸ் இல்லை என்றால் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுக்கலாம்.

- Advertisement -

வீட்டில் ஏதாவது விசேஷங்கள் வந்தாலும் மிகவும் எளிமையான முறையில் நாம் இந்த பச்சரிசி அல்வாவை செய்து கொடுக்கலாம். பச்சரிசியில் செய்யப் போகும் அல்வா எப்படி வரும் என்ற கவலை வேண்டாம். உண்மையிலேயே சுவை மிகவும் அருமையாக இருக்கும். இந்த சுவையான இனிப்பான பச்சரிசி அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
4.80 from 5 votes

பச்சரிசி அல்வா | Raw Rice Halwa Recipe In Tamil

பச்சரிசியில் அல்வா செய்த சாப்டு இருக்க மாட்டோம்.கடைக்கு போய் எதுவும் வாங்காமல் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து சுலபமானமுறையில் நாம் இந்த பச்சரிசி அல்வாவை செய்து முடித்து விடலாம். குழந்தைகள் ஸ்கூல் விட்டுவீட்டுக்கு வரும் நேரத்தில் வீட்டில் எதுவும் ஸ்னாக்ஸ் இல்லை என்றால் குழந்தைகளுக்குஇதனை செய்து கொடுக்கலாம். இந்த சுவையான இனிப்பான பச்சரிசி அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: sweets
Cuisine: tamil nadu
Keyword: Raw rice Halwa
Yield: 4
Calories: 0.285kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 கப் பச்சரிசி மாவு
  • 1 கப் கடலைப் பருப்பு
  • 1 1/2 கப் வெல்லம்
  • 15 முந்திரி
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பச்சரிசி மாவில் தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வெள்ளத்தை தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் கடலை பருப்பை போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பருப்பு ஓரளவிற்குகுழைந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது அந்த பருப்புடன் கரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவை சேர்த்து கிளறவும். மாவு நன்றாக வெந்து வரும் பொழுது கரைத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை அதில் சேர்த்து விட வேண்டும்.
  • ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்புகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்
  • பச்சரிசி மாவு கலவையுடன் ஏலக்காய் தடை சேர்த்து கிளறிவிட்டு வறுத்து வைத்துள்ள முந்திரிகளையும் நெய்யுடன் அதில் சேர்த்து விட வேண்டும்.
  • பச்சரிசி மாவு வெந்து வர வர கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கினால் சுடச்சுட பச்சரிசி அல்வா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 0.285kcal | Carbohydrates: 12g | Protein: 12.2g | Fat: 10.4g | Calcium: 3.1mg | Iron: 0.26mg

இதையும் படியுங்கள் : பப்பாளி பழம் இருந்தால் போதும் தித்திக்கும் சுவையில் அல்வா இப்படி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள்!