Home ஸ்நாக்ஸ் செவ்வாழை பழம் இருந்தா இப்படி சுவையான செவ்வாழை பழ கேக் செய்து பாருங்கள்!!!

செவ்வாழை பழம் இருந்தா இப்படி சுவையான செவ்வாழை பழ கேக் செய்து பாருங்கள்!!!

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கை முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்றெல்லாம் தின்று அலுத்துப் போன பெரியவர்களுக்கு கேக் செய்து‌ கொடுத்தால் கொஞ்சம் மாற்றமாக இருக்கும். கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன.

-விளம்பரம்-

வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே செவ்வாழைப்பழ கேக் செய்து அசத்துங்கள். பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்திற்கு சுவையான டீயுடன் ஸ்நாக்ஸ் வகைகள் எடுத்து கொள்வார்கள். அந்த வகையில் இது போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் வீட்டிலுள்ள பழங்களை வைத்து ஸ்நாக்ஸ் செய்யலாம்.

பழ கேக்குகளில் ஒன்றான செவ்வாழை கேக் செய்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சி அதிகரிக்கும். அத்துடன் சர்க்கரை நோயாளர்கள் இதனை காலை உணவாக கூட எடுத்து கொள்ளலாம். இந்த கேக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவை. இந்த கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமண நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா போன்ற தினங்களுக்கும், சில வகையான பண்டிகை நாட்கள் அதாவது கிருத்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களுக்கும் வெட்டி மகிழலாம்.

Print
No ratings yet

செவ்வாழை பழ கேக் | Red Banana Cake Recipe In Tamil

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கை முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்றெல்லாம் தின்று அலுத்துப் போன பெரியவர்களுக்கு கேக் செய்து‌ கொடுத்தால் கொஞ்சம் மாற்றமாக இருக்கும். கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே செவ்வாழைப்பழ கேக் செய்து அசத்துங்கள்.
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Red Banana Cake
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மைக்ரோ ஓவன்

தேவையான பொருட்கள்

  • 1 கப் மைதா
  • 1/2 கப் கோதுமை மாவு
  • 1/4 கப் கோகோ பவுடர்
  • 1/2 கப் சர்க்கரை
  • 5 செவ்வாழை
  • 1/4 கப் வெண்ணெய்
  • 3/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • 4 டேபிள் ஸ்பூன் பால்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1/4 கப் நட்ஸ்
  • 4 டேபிள் ஸ்பூன் சாக்கோ சிப்ஸ்

செய்முறை

  • முதலில் மைதா, கோதுமை மாவு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை சலித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பௌலில் செவ்வாழை பழத்தை தோல் உரித்து சேர்த்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் நாட்டு சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் சலித்து வைத்துள்ள மைதா மாவு கலவையுடன் பால், வெண்ணெய், வாழைப்பழ கலவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் வெண்ணிலா எசன்ஸ், நட்ஸ், சாக்கோ சிப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து வாழைப்பழ கேக் மாவு கலவையை ஊற்றி மைக்ரோ வேவ் ஓவனில் 190 டிகிரியில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  • கேக் நன்கு ஆறியவுடன் விருப்பப்படி துண்டுகள் போட்டு பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் சத்தான, மிருதுவான, சுவையான செவ்வாழை பழ கேக் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 105kcal | Carbohydrates: 2.7g | Protein: 3.1g | Fat: 4g | Sodium: 26mg | Potassium: 358mg | Fiber: 3.1g | Sugar: 1.9g | Vitamin A: 56IU | Vitamin C: 8.7mg | Calcium: 5mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான லாவா கேக் இப்படி ரெம்ப சுலபமாக வீட்டிலயே செஞ்சு பாருங்க அஞ்சு நிமிஷத்துல எல்லாமே காலி ஆகிவிடும்!