ரெட் ஜூஸ் அப்படின்னா அது என்ன அப்படின்னு நிறைய பேரு யோசிச்சிட்டு இருப்பீங்க. இந்த ரெட் ஜூஸ் குடிக்கிறதால உடம்புல ரத்தம் சம்பந்தமா இருக்கிற பிரச்சினைகளான ரத்த சோகை ஹீமோகுளோபின் கம்மியா இருக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் இருக்கிறது அப்படின்னு எக்கச்சக்கமான பிரச்சனைகள் எல்லாமே இந்த ஒரு ஜூஸ் குடிக்கிறதால நமக்கு சரியாகிவிடும்.
ஆரோக்கியமான இந்த ஜூஸ் செய்வது ரொம்பவே ஈஸி தான். சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் இந்த ஜூஸ கொடுத்தோம் அப்படின்னா மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியமே கிடையாது. அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ஜூஸ் தான் இந்த ரெட் ஜூஸ். இந்த ரெட் ஜூஸ் செய்வதற்கு நமக்கு தேவைப்படுற ரெட் கலர் பழங்கள் காய்கறிகள் என்னென்ன அப்படின்னு பார்த்தா ஸ்ட்ராபெரி பீட்ரூட் மாதுளம் பழம் இதுதான் நமக்கு முக்கியமா தேவைப்படுற சில பழங்களும் காய்கறிகளும்.
இந்த மூன்றையும் நம்ம அப்படியே சாப்பிட்டா கூட நம்ம உடம்புல ரத்தம் அதிகரிக்கும். முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் இந்த பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் அப்படின்னு சொல்லுவாங்க. இவ்வளவு சத்தான இந்த ரெட் ஜூஸ் போடறது ரொம்பவே ஈஸி தான். இந்த வெயில் காலத்துக்கும் இந்த ஜூஸ் குடிக்கிறது தொண்டைக்கு இதமா நம்ம உடம்ப வறட்சி ஆக்காம வைக்கும். இந்த சூப்பரான சத்தான ரெட் ஜூஸ் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
ரெட் ஜூஸ் | Red Juice Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 பீட்ரூட்
- 1 மாதுளம் பழம்
- 7 ஸ்ட்ராபெரி
- 1 டேபிள்ஸ்பூன் பூசணி விதைகள்
- 5 பேரிச்சம்பழம்
- தேன்
- 2 டேபிள்ஸ்பூன் வாழைப்பழம்
- 1 கப் பால்
செய்முறை
- முதலில் மாதுளம் பழம் பீட்ரூட் மற்றும் ஸ்ட்ராபெரியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- வடிகட்டி எடுத்த ஜூஸை மறுபடியும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் பூசணி விதைகள் பேரிச்சம் பழம் வாழைப்பழம் தேன் பால் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
- ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள் சேர்த்து அதை இந்த அரைத்த ஜூஸை சேர்த்து பரிமாறினால் சுவையான ரெட் ஜூஸ் தயார்