உங்கள் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளை பொலிவுடன் இருக்க வேண்டுமா ?

- Advertisement -

உங்கள் முகம் கருமையாக உள்ளதா அல்லது பருக்கள் வந்த இடத்தில் கருப்பு ஆக உள்ளதா. இதை எளிமையாக சரி செய்யலாம் பெரும்பாலானவர்களுக்கு அதுவும் பெண்கள் தங்கள் முகம் இப்பொழுதும் வெள்ளையாகவும், அழகாகவும், பொலிவுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் இதில் தவறான விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் அதற்காக கடையில் விற்கும் ரசாயன பியூட்டி பொருட்களை வாங்கி அதிக அளவில் பயன்படுத்துவது மிகவும் தவறான விஷயம். இப்பொழுது உங்கள் உன் முகத்தில் உள்ள கருமையை நீக்கி உங்கள் முகத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையாக கிரீம் ஒன்று எப்படி தயாரிப்பது, தேவையான பொருட்கள், செய்முறை, அப்ளை செய்யும் விதம் என அனைத்தையும் இந்த அழகு குறிப்பில் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

தேவையான பொருட்கள் :-

- Advertisement -
  1. பீட்ருட் – பாதி அளவு
  2. சாதம் – 3 டீஸ்பூன்
  3. ரோஸ் வாட்டர் -3 டீஸ்பூன்
  4. தண்ணீர் -தேவையான அளவு
beetroot cream

தயார்செய்யும் முறை :-

செய்முறை 1 :-

முதலில் பீட்ரூட் ஒன்றை எடுத்து சுத்தமாக கழுவி கொள்ளுங்கள் கழுவிய பின்பு பீட்ரூட்டின் தோல் பகுதியை முழுமையாக நீக்கி விடுங்கள் தோல் உரித்த பீட்ரூட்டில் பாதி அளவு வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

செய்முறை 2 :-

பின்பு பாதி அளவு கட் செய்த பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 3 :-

-விளம்பரம்-

பின்பு அரைத்த பீட்ரூட்டை ஒரு பவுலில் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள் பின்பு பின்பு மற்றொரு பவுலையும் எடுத்துக்கொண்டு அரைத்த பீட்ரூட்டை ஒரு கையளவு எடுத்து அதை அப்படியே பிழிந்து அந்த சாற்றினை பவுலில் சேகரிக்கவும் அப்படியே மீதம் இருக்கும் பீட்ரூட்டையும் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 4 :-

பின் பீட்ரூட் அரைத்த அதே மிக்ஸி ஜாரில் 3 டீஸ்பூன் அளவிலான சாதத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதே போல் மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 5 :-

பின்பு பவுலில் சாறு எடுத்து வைத்திருக்கும் பீட்ரூட்டையும் மிக்ஸி ஜாரில் ஊற்றி இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும்.

செய்முறை 6 :-

இதை ஒரு பவுலில் தனியாக எடுத்து இதனுடன் 3 டீஸ்பூன் அளவிலான ரோஸ் வாட்டரையும் சேர்த்துக் நன்றாக கலக்கி கொள்ளவும்.இப்பொழுது நம் பீட்ரூட் கிரீம் தயாராகிவிட்டது.

அப்பளை செய்யும் விதம் :-

செய்முறை 1 :-

நாம் தயார் செய்து வைத்துள்ள பீட்ரூட் க்ரீமை தினசரி இரவு தூங்குவதற்கு முன் நாம் முகத்தில் இருந்து கழுத்து வரை அப்ளை செய்து கொள்ளுங்கள்.

செய்முறை 2 :-

நீங்கள் இந்த கிரீமை முகத்திற்கு மட்டும் அப்ளை செய்தால் முகம் ஒரு கலராகவும் கழுத்து ஒரு கலராகவும் தெரியும் அதனால் கருத்து வரையிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

செய்முறை 3 :-

அப்ளை செய்து விட்டு 30- 40 நிமிடங்கள் நன்றாக காயும் வரை காத்திருங்கள். காய்ந்தவுடன் பின்பு முகத்தை நன்றாக கழுவி விட்டு துண்டை வைத்து முகத்தை துடைக்காதீர்கள்.

செய்முறை 4 :-

முகத்தில் உள்ள தண்ணியை தூண்டை வைத்து ஒற்றி எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த கிரீமை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருமை, பருக்கள் என அனைத்தையும் எடுத்து உங்கள் முகத்துக்கு விரைவாக அழகு சேர்க்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here