ரோட்டு கடை ஸ்டைல் தக்காளி சட்னி ஒரு தரம் இப்படி செஞ்சு பாருங்க இரண்டு இட்லி சேர்த்தே சாப்பிடுவாங்க!

- Advertisement -

என்னதான் நம்ம வீட்ல வித விதமா சட்னி, சாம்பார் அப்படின்னு செஞ்சாலும் எல்லாருக்குமே கடைகள்ல கிடைக்கிற சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும். அதுலயும் இட்லி தோசை வாங்குவது சில பேரு சட்னிக்காக தான். சட்னி நிறைய கொடுக்கிற ஹோட்டலா கடையா தேடி பிடிச்சு தான் வாங்குவாங்க ஏன்னா சில பேருக்கு சட்னியும் சாம்பாரையும் ஊத்தி ஊத்தி குடிக்கிறதுன்னா  ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுக்காகவே கடைகளில் போய் இட்லி தோசை வாங்குவாங்க.

-விளம்பரம்-

அந்த வகையில எல்லாருக்குமே ரொம்ப பிடிச்ச ரோட்டு கடைகள்ல கிடைக்கக்கூடிய சூப்பரான ரோட்டு கடை தக்காளி சட்னி தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். மூணு தக்காளி இருந்தா போதும் அதை வச்சு நம்ம நிறைய சட்னி செய்ய முடியும். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த ரோட்டு கடை தக்காளி சட்னி வாங்குறதுக்கு இனி மேல் ரோட்டு கடைக்கு போகணும் என்ற அவசியமே கிடையாது நம்மலே வீட்டுல ரொம்பவே சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம்.

- Advertisement -

அதுவும் கடைகள்ல எப்படி கிடைக்குதோ அதே மாதிரியான டேஸ்ட்டிலையே நம்மளால செய்ய முடியும். குறைவான பொருட்களை வைத்து ரொம்ப டேஸ்டா செய்யக்கூடிய இந்த ரோட்டு கடை தக்காளி சட்னி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ரோட்டு கடை தக்காளி சட்னியை 15 நிமிஷத்துல எப்படி ஈஸியா டக்குனு செய்றதுன்னு பார்க்கலாம்

Print
5 from 1 vote

ரோட்டு கடை தக்காளி சட்னி | Rottu Kadai Tomato chutney

என்னதான் நம்ம வீட்ல வித விதமா சட்னி, சாம்பார் அப்படின்னு செஞ்சாலும் எல்லாருக்குமே கடைகள்ல கிடைக்கிற சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும். அதுலயும் இட்லி தோசை வாங்குவது சில பேரு சட்னிக்காக தான். சட்னி நிறைய கொடுக்கிற ஹோட்டலா கடையா தேடி பிடிச்சு தான் வாங்குவாங்க ஏன்னா சில பேருக்கு சட்னியும் சாம்பாரையும் ஊத்தி ஊத்தி குடிக்கிறதுன்னா  ரொம்பரொம்ப பிடிக்கும். அதுக்காகவே கடைகளில் போய் இட்லி தோசை வாங்குவாங்க.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: chutney
Cuisine: tamil nadu
Keyword: Rottu Kadai Tomato chutney
Yield: 4
Calories: 206kcal

Equipment

  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 10 பல் பூண்டு
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 7 காய்ந்தமிளகாய்
  • 1/2 கப் இட்லி மாவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம் காய்ந்த மிளகாய் பூண்டு பெரிய வெங்காயம் அனைத்தும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • பிறகு தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்
  • பிறகு அரைத்து வைத்த வெங்காயம் விழுதை சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி விழுதையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  • இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும் பிறகு இட்லி மாவை சேர்த்து நன்றாக கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்
  • இறுதியாக கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான ரோட்டுக்கடை தக்காளி சட்னி தயார்

Nutrition

Serving: 250g | Calories: 206kcal | Carbohydrates: 67g | Protein: 26g | Sodium: 71mg | Potassium: 328mg | Iron: 1mg


இதையும் படியுங்கள் : ருசியான அதே நேரம் ஆரோக்கியமான தூதுவளை சட்னி! வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!