- Advertisement -
பிரியாணி, புலாவ், வெஜ் ப்ரைட் ரைஸ் இப்படியான வகைகளில் சுவை, நிறம் இதற்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானது சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக இருப்பதுதான். பாஸ்மதி அரிசி பதில் சாமை அரிசியில் பிரியாணி சமைத்து பாருங்கள் . பிரியாணி எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக சாமை அரிசியில் வைத்து ஒரு அருமையான
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : மட்டன் பிரியாணி குக்கரில் குழையாமல் வர இப்படி செய்யுங்க!
- Advertisement -
பிரியாணியை எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இப்படி செய்யும் போது பாஸ்மதி அரிசி பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட, விரும்பி சாப்பிடுவார்கள். அத்துடன் இதில் காய்கறிகள் அனைத்தும் சேர்த்துக் கொடுப்பதால் ஒரு நல்ல சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.
சாமை அரிசி பிரியாணி | Samaiarisi Biriyani Recipe in Tamil
பிரியாணி, புலாவ், வெஜ் ப்ரைட் ரைஸ் இப்படியான வகைகளில் சுவை, நிறம் இதற்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானது சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக இருப்பதுதான். பாஸ்மதி அரிசி பதில் சாமை அரிசியில் பிரியாணி சமைத்து பாருங்கள் . பிரியாணி எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக சாமை அரிசியில் வைத்து ஒரு அருமையான பிரியாணியை எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இப்படி செய்யும் போது பாஸ்மதி அரிசி பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட, விரும்பி சாப்பிடுவார்கள். அத்துடன் இதில் காய்கறிகள் அனைத்தும் சேர்த்துக் கொடுப்பதால் ஒரு நல்ல சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.
Yield: 4 People
Calories: 412kcal
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் சாமை அரிசி
- 4 பல் பூண்டு
- 1 சிறிய துண்டு இஞ்சி
- 1 பட்டை
- 2 ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- 3 லவங்கம்
- 2 கப் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் கலந்தது
- 1/4 கப் பட்டாணி
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 1 தக்காளி நறுக்கியது
- 1/4 Tsp மிளகாய் தூள்
- 1/2 Tsp மஞ்சள் தூள்
- 1 Tbsp எண்ணெய்
- 1 Tbsp நெய்
- 1 கைப்பிடி புதினா, கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
- 5 முந்திரி
- உப்பு தேவையான அளவு
- 3 கப் தண்ணீர்
- தயிர் சிறிதளவு
- எலுமிச்சை சாறு பாதி பழம்
செய்முறை
- முதலில் நாம் வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, புதினா, காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் சாமை அரிசியைக் கழுவி ஊறவைக்கவும்.
- பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
- பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாக வதங்கியதும் அதில் காய்கறிகள், பச்சைப் பட்டாணியைச் சேர்த்துக் கிளறவும்.
- அதன் பின் தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் சேர்த்து மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் அதிலன மூன்று கப் அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- பின் நன்கு கொதி வந்தவுடன் நாம் ஊறவைத்த சாமை அரிசியைச் சேர்த்து, மிதமான சூட்டில் வேகவைக்கவும். அதன் பின் அரிசி முக்கால் பாகம் வெந்து வந்தவுடன்.
- நாம் நறுக்கிய வைத்துள்ள புதினா, கொத்தமல்லி சேர்த்து, நெய் விட்டு, முந்திரியைத் தூவி ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். கடைசியாக எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, நன்றாகக் கிளறிப் பரிமாறவும். அவ்வளவு தான் சாமை அரிசி பிரியாணி தயார்.
Nutrition
Serving: 1200G | Calories: 412kcal | Carbohydrates: 78g | Protein: 21g | Fat: 1.2g | Cholesterol: 4mg | Potassium: 66mg | Fiber: 2g | Sugar: 0.5g | Vitamin A: 13IU | Iron: 0.2mg