- Advertisement -
அசைவ பிரியர்களுக்கு யாருக்கு தான் பிரியாணி என்றால் பிடிக்காது. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். பெயரை கேட்டாலே எல்லோருடைய வாயில் எச்சில் ஊரும். அதுவும் மட்டன் பிரியாணி என்றால் அவளவுதான் விரும்பி சாப்பிடுவாங்க.
அந்த வகையில் நம் வீட்டிலே மட்டன் பிரியாணி குக்கரில் எப்படி செய்வதென்றுதான் இன்று பார்க்க போகிறோம்.
- Advertisement -
அதுவும் குக்கரில் குழையாமல் எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம். சுலபமாகவும், ஹோட்டல் சுவையில் வீட்டிலே செய்து விடலாம்.
-விளம்பரம்-
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துக்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
மட்டன் பிரியாணி | Mutton Biriyani Recipe In Tamil
அசைவ பிரியர்களுக்கு யாருக்கு தான் பிரியாணி என்றால் பிடிக்காது. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். பெயரை கேட்டாலே எல்லோருடைய வாயில் எச்சில் ஊரும். அதுவும் மட்டன் பிரியாணி என்றால் அவளவுதான் விரும்பி சாப்பிடுவாங்க.அந்த வகையில் நம் வீட்டிலே மட்டன் பிரியாணி குக்கரில் எப்படி செய்வதென்றுதான் இன்று பார்க்க போகிறோம்.அதுவும் குக்கரில் குழையாமல் எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம். சுலபமாகவும், ஹோட்டல் சுவையில் வீட்டிலே செய்து விடலாம்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துக்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
Yield: 4 people
Equipment
- 2 குக்கர்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
வேக வைக்க தேவையான பொருட்கள்:
- 2½ கப் பாசுமதி அரிசி
- 500 கிராம் மட்டன்
- ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 பட்டை
- 2 ஏலக்காய்
- 2 பிரிஞ்சி இலை
- 5 கிராம்பு
- 1 கருப்பு ஏலக்காய்
- உப்பு தேவையான அளவு
அரைக்க:
- ¾ ஸ்பூன் மல்லி
- 1 காஸ்மீரி மிளகாய்
- 5 வரமிளகாய்
- ½ டீஸ்பூன் சோம்பு
- ½ டீஸ்பூன் சீரகம்
- 10 மிளகு
- 2 பிரிஞ்சி இலை
- 2½ பட்டை
- 5 ஏலக்காய்
- 1 கருப்பு ஏலக்காய்
- 10 கிராம்பு
பிரியாணி செய்வதற்கு:
- ½ கப் எண்ணெய்
- 1 டீஸ்பூன் நெய்
- 1 கப் மல்லி இலை
- 1 கப் புதினா
- 120 கிராம் வெங்காயம் நீளமாக நறுக்கியது
- 1½ டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 பச்சை மிளகாய் இரண்டாக நறுக்கியது
- 3 தக்காளி நறுக்கியது
- 2 டேபிள் ஸ்பூன் தயிர்
- எலுமிச்சை சாறு அரை பலம்
செய்முறை
செய்முறை:
- முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
வேக வைப்பது:
- முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து அத்துடன் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலக்காய், கிராம்பு, கருப்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை சிறிதளவு உப்பு சேர்த்து மட்டன் முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் பக்குவமாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
மசாலா அரைப்பது:
- ஒரு மிக்சியில் மல்லி, காஸ்மீரி மிளகாய், வர மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கருப்பு ஏலக்காய், சேர்த்து நன்கு பொடித்து எடுத்துக்கொள்ளவும். {இந்த மசாலாவை எல்லா வகையான பிரியாணிக்கும் சேர்க்கலாம்}
பிரியாணி செய்வது:
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் சேர்த்து காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வதக்கவும்.
- வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நன்கு வதங்கி வரவேண்டும்.
- வதங்கியதும் தக்காளி சேர்த்து கொழைய வதக்கவும். பிறகு கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து வதக்கவும். அடுத்து தயிர் சேர்த்து கொழைய வதங்கியதும் அரைத்து வைத்த பிரியாணி மசாலாவை சேர்த்து கலந்து மட்டனை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் அப்படியே வதக்கவும்.
- பிறகு வதங்கியதும் 4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவேண்டும். அப்பொழுது மட்டனை வேக வைத்த தண்ணீரோடு சேர்த்து கணக்கில் வைத்து மீதி அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
- நன்கு கலந்து விடவும். அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொதித்ததும் மீதான தீயில் அரிசியை சேர்த்து மூடி விட்டு 1 விசில் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவேண்டும்.
- பிரஷர் போனதும் திறக்கவும். மெதுவாக கிளறி விடவும். இப்பொழுது சுவையான மட்டன் பிரியாணி தயார்.