Home காலை உணவு வீட்ல சத்துமாவு இருந்தா இந்த மாதிரி ஒரு தடவை சத்துமாவு கொழுக்கட்டை செஞ்சு சாப்பிடுங்க!

வீட்ல சத்துமாவு இருந்தா இந்த மாதிரி ஒரு தடவை சத்துமாவு கொழுக்கட்டை செஞ்சு சாப்பிடுங்க!

பொதுவா சின்ன குழந்தைகளுக்கு பால்வாடியில் கொடுக்கிற சத்துமாவ அதிகமான யூஸ் பண்ண மாட்டோம் ஆனால் அந்த மாவை வைத்து நிறைய டிஃபரண்டான ரெசிபி செய்யலாம். உதாரணமா சத்து மாவு உருண்டை சத்துமாவு கோல் சத்துமாவு போட்டு ஏராளமான ரெசிப்பி செய்ய முடியும். ஆனா இப்ப நம்ம சத்து மாவு வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான கொழுக்கட்டை தான் பார்க்க போறோம்.

-விளம்பரம்-

இந்தக் கொழுக்கட்டையில் நெய் தேங்காய் துண்டுகள் சேர்த்து செய்றதால சாப்பிடும் போது கரன்சியா சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையா இருக்கும். உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. மிகவும் சுவையாக இருக்கக்கூடிய இந்த சத்துமாவை கொழுக்கட்டையை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸா மாலை நேரத்தில் செஞ்சு கொடுக்கலாம். அதுமட்டுமில்லாமல் இப்போ குழந்தைகளுக்கு லீவு பெற விட போறாங்க அதனால டெய்லி ஒரு ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுப்போம் அதுல இந்த சத்து மாவு கொழுக்கட்டையும் நீங்க சேர்த்துக்கலாம்.

ஒரு தடவை இந்த சத்துமாவு கொழுக்கட்டை உங்க வீட்ல உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க அதுக்கப்புறம் உங்க குழந்தைகளே இதை அடிக்கடி கேட்பாங்க. மருத்துவமனையிலும் குழந்தைகளோட பால்வாடியிலும் கொடுக்கிற இந்த சத்து மாவில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கு அதனால அதை வேஸ்ட் பண்ணாம குழந்தைகளுக்கு கொழுக்கட்டையாவோ இல்ல வேற ஏதாவது ரெசிபி சாவோ செஞ்சு கொடுக்கலாம்.இப்ப வாங்க இந்த சுவையான சத்து மாவு கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

சத்துமாவு கொழுக்கட்டை | Sathu maavu kozhukattai In Tamil

கொழுக்கட்டையில் நெய் தேங்காய் துண்டுகள் சேர்த்து செய்றதால சாப்பிடும் போது கரன்சியா சாப்பிடுவதற்குரொம்பவே சுவையா இருக்கும். உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. மிகவும் சுவையாக இருக்கக்கூடியஇந்த சத்துமாவை கொழுக்கட்டையை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸா மாலை நேரத்தில் செஞ்சு கொடுக்கலாம்.அதுமட்டுமில்லாமல் இப்போ குழந்தைகளுக்கு லீவு பெற விட போறாங்க அதனால டெய்லி ஒரு ஸ்னாக்ஸ்செஞ்சு கொடுப்போம் அதுல இந்த சத்து மாவு கொழுக்கட்டையும் நீங்க சேர்த்துக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, snacks
Cuisine: tamil nadu
Keyword: Sathu Maavu Kozhukattai
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் சத்து மாவு
  • 1/2 கப் நாட்டுச் சர்க்கரை
  • 4 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியதேங்காய் துண்டுகள்
  • 1 டீஸ்பூன் நெய்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் சத்து மாவு சேர்த்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை தேங்காய் துண்டுகள் ஏலக்காய் பொடி அனைத்தும்சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  • ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்
  • அதனை கைகளில் கொழுக்கட்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான சத்து மாவு கொழுக்கட்டை தயார்

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 23g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg

இதையும் படியுங்கள் : கிராமத்து சக்கரைவள்ளி கிழங்கு கொழுக்கட்டை ஒரு முனை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!