Advertisement
சைவம்

ஹோட்டலில் நாம் விரும்பி சாப்பிடும் ருசியான செஸ்வான் சிக்கன் ரெம்ப ஈஸியாக வீட்டில் செய்யலாம் ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

எப்பவுமே கடைகளில் வாங்கி சாப்பிடுற செஸ்வான் சிக்கன் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். ஹோட்டல்களில் சாப்பிடும் செஸ்வான் சிக்கனோட டேஸ்ட்டுக்கு மயங்காத ஆட்களே இல்ல அப்படின்னு சொல்லலாம். எப்படியாவது ஒரு ட்ரீட் இல்லை ஹோட்டலுக்கு சாப்பிட போனாலும் ஸ்பெஷலா ஆர்டர் பண்ண சொல்லும்போது எல்லாரும் ஆர்டர் பண்றது இந்த செஸ்வான் சிக்கன் தான். அந்த சிஷ்வான் மசாலால அப்படி என்ன சுவை இருக்கு எல்லாருக்குமே இவ்வளவு பிடிக்குதே?

இதே மாதிரி நம்மளும் வீட்ல செய்து கொடுக்கலாமே அப்படின்னு நிறைய பேருக்கு தோன்றியிருக்கும். ஆனால் நமக்கு என்னதான் ட்ரை பண்ணாலும் அந்த செஸ்வான் சிக்கன் டேஸ்ட்டு வரதே கிடையாது. அதே மாதிரியான செஸ்வான் சுவையில் ஹோட்டல்களை எப்படி செய்வாங்கலோ அதே மாதிரி வீட்ல செய்து எல்லாரையும் அசத்துங்க. சாப்பிடுவதற்கு மட்டும் டேஸ்ட்டா இல்லாம எல்லாரும் விருப்பப்படுற உணவா இருக்கறதுனால எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

Advertisement

நீங்க செய்தீங்கன்னா சட்டுனு எல்லாமே காலி ஆயிடும். இத்தனை சுவையான செஸ்வான் சிக்கன் ரொம்ப ஈஸியா வீட்ல இருக்குற பொருட்களை வைத்து செய்துவிடலாம். இப்படி வித்தியாசமா ஹோட்டல் சுவைகளில் எல்லாரும் விருப்பப்படுற உணவை வீட்டில் செய்து கொடுக்கும் போது எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க. சரி வாங்க எப்படி இந்த செஸ்வான் சிக்கன ஹோட்டல் ஸ்டைலை வீட்டிலேயே செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

செஸ்வான் சிக்கன் | Schezwan Chicken Recipe In Tamil

Print Recipe
ஹோட்டல்களில் சாப்பிடும் செஸ்வான் சிக்கனோட டேஸ்ட்டுக்கு மயங்காத ஆட்களே இல்ல அப்படின்னு சொல்லலாம். எப்படியாவது ஒரு ட்ரீட் இல்லை ஹோட்டலுக்கு சாப்பிட போனாலும் ஸ்பெஷலா ஆர்டர் பண்ண சொல்லும் போது எல்லாரும் ஆர்டர் பண்றது இந்த செஸ்வான் சிக்கன் தான். அந்த சிஷ்வான் மசாலால அப்படி என்ன சுவை இருக்கு எல்லாருக்குமே இவ்வளவு பிடிக்குதே?. இப்படி வித்தியாசமா ஹோட்டல் சுவைகளில் எல்லாரும் விருப்பப்படுற உணவை வீட்டில் செய்து கொடுக்கும்
Advertisement
போது எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க. சரி வாங்க எப்படி இந்த செஸ்வான் சிக்கன ஹோட்டல் ஸ்டைலை வீட்டிலேயே செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
Course starters
Cuisine Chinese
Keyword Schezwan Chicken
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 99.93

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 கப் மைதா
  • 1 முட்டை
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 ஸ்பூன் சோள மாவு
  • 1 ஸ்பூன் சோயாசாஸ்
  • 2 ஸ்பூன்  செஸ்வான் சாஸ்
  • 1 ஸ்பூன் நாட்டு சக்கரை
  • 2 ஸ்பூன் வெள்ளைஎள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் சிக்கனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன்களை சேர்த்து அதில் மிளகுத்தூள், சோளமாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து விட வேண்டும்.
  •  பிறகு இதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  •  பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஊற வைத்துள்ள சிக்கன்களைஎடுத்து மைதா மாவில் முழுவதுமாக படுமாறு பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும்.
  • எண்ணெயில் சிக்கனை போடும்பொழுது நன்றாக சூடாக இருக்க வேண்டும். பிறகு அதை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
  • பொரிந்த பிறகு அவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோயா சாஸ், செஸ்வான் சாஸ், நாட்டு சக்கரை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  •  
     இவை நன்றாக கலந்த பிறகு அதில் பொரித்து எடுத்து வைத்துள்ள சிக்கன்களை சேர்த்து இந்த சாஸ்கள் முழுவதும் சிக்கனில் படுமாறு நன்றாக கலந்து விட வேண்டும்.
     
  • சாஸ்கள் அனைத்தும் சிக்கனில் நன்றாக கலந்த பிறகு மேலே வெள்ளை எள் தூவக இறக்கி பரிமாறினால் சூடான சுவையான செஸ்வான் சிக்கன் ஹோட்டல் சுவையில் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.91g | Protein: 3.49g | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Fiber: 1.24g | Vitamin C: 654mg | Calcium: 23.13mg | Iron: 0.29mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

14 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

21 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago