காலை டிபனுக்கு சூப்பரான சேமியா இட்லி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! ஒன்னு கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

- Advertisement -

இட்லி பல வெரைட்டி இருக்கு இதுல மசாலா இட்லி, குட்டி இட்லி , கோதுமை இட்லி, ரவா இட்லி, ராகி இட்லி இப்படின்னு பல வகையான இட்லிகள் செஞ்சு சாப்பிடுவோம். ஆனால் இன்னைக்கு நம்ம சூப்பரா சுவையான சேமியா இட்லி செய்ய போறோம். மாவு இல்லாத டைத்துல ரொம்ப சூப்பரா ரொம்ப சீக்கிரமா இந்த சேமியா இட்லிய சுவையா செஞ்சி சாப்பிடலாம். இந்த சுவையான சேமியா இட்லி எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் சேமியா அப்படின்னாலே நம்ம பாயசம் செய்வோம் இல்ல உப்புமா செய்வது இந்த மாதிரி தான் பண்ணுவோம். ஆனா இப்போ நம்ம பண்ண போறது சேமியா இட்லி.

-விளம்பரம்-

சேமியாவில் இட்லி பண்ண எவ்வளவு நல்லா இருக்கும் பாயாசம் கடகடன்னு சாப்பிடும் போது இருக்கும் எண்ணம் சேமியாவில் இட்லி செய்தால்எப்படி சாப்பிடுவோம். இந்த சுவையான சேமியா இட்லி ரொம்பவே டேஸ்டா இருக்கிறது மட்டுமில்லாமல் எல்லாரையும் விரும்பி சாப்பிடவும் வைக்கும். இது செய்வது ரொம்ப ரொம்ப சுலபம். ஒரு நாள் நைட் ஃபுல்லா மாவு ஊறணும்னு அவசியமே இல்லை ஒரு அரை மணி நேரம் இந்த மாவு ஊறவைத்து அப்படியே இட்லி எடுத்து ஊத்துனீங்களா ரொம்பவே டேஸ்டா சுவையா ரெடியாயிடும் இந்த சேமியா இட்லி.

- Advertisement -

இந்த சேமியா இட்லியா நீங்க எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமே சாப்பிடலாம். அப்படி உங்களுக்கு சைட் டிஷ் வேணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா நீங்க தேங்காய் சட்னி செய்து சாப்டீங்களா ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த மாதிரி சுவையான சேமியா இட்லியை நீங்க செய்து கொடுக்கும் போது எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க செய்ற இட்லி டக்குனு காலி ஆயிடும். இந்த மாதிரி சுவையா விதவிதமான உணவுகளை செய்து கொடுக்கும்போது எல்லாருக்குமே அது ரொம்பவே பிடிக்கும் என்ன அதிகமாகவே இருக்கும். அந்த வகையில இன்னைக்கு எப்படி இந்த சேமியா இட்லி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

சேமியா இட்லி | Semiya idli recipe in tamil

இட்லி பல வெரைட்டி இருக்கு இதுல மசாலா இட்லி, குட்டி இட்லி , கோதுமை இட்லி, ரவா இட்லி, ராகி இட்லி இப்படின்னு பல வகையான இட்லிகள் செஞ்சு சாப்பிடுவோம். ஆனால் இன்னைக்கு நம்ம சூப்பரா சுவையான சேமியா இட்லி செய்ய போறோம். மாவு இல்லாத டைத்துல ரொம்ப சூப்பரா ரொம்ப சீக்கிரமா இந்த சேமியா இட்லிய சுவையா செஞ்சி சாப்பிடலாம். இந்த சுவையான சேமியா இட்லி எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் சேமியா அப்படின்னாலே நம்ம பாயசம் செய்வோம் இல்ல உப்புமா செய்வது இந்த மாதிரி தான் பண்ணுவோம். ஆனா இப்போ நம்ம பண்ண போறது சேமியா இட்லி.
Prep Time20 minutes
Active Time15 minutes
Total Time35 minutes
Course: Breakfast
Cuisine: tamilnadu
Keyword: kadalai mavu idli, Kanjipuram Idli, Mini Peper Idli
Yield: 6 People
Calories: 150kcal
Cost: 50

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் சேமியா
  • 1/2 கப் ரவா
  • 1 கப் வெங்காயம்
  • 1/2 கப் குடைமிளகாய்
  • 1/2 கப் கேரட்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கப் தயிர்
  • கொத்தமல்லி கறிவேப்பிலை சிறிதளவு
  • 1 ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் கடுகு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுந்து , கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் சேமியாவை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் ரவாவை சேர்த்து வறுத்து விட்டு அடுப்பை ஆப் செய்து விட வேண்டும்
  • வறுத்து எடுத்து வைத்துள்ள சேமியாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்க வேண்டும்
  • வறுத்து எடுத்து வைத்துள்ள சேமியா ரவாவில் வெங்காயம் , துருவிய கேரட், குடைமிளகாய் , பச்சை மிளகாய், கொத்தமல்லி , கருவேப்பிலைே சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் பின்பு அதில் தயிரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  • இந்த இந்த கலவையை ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும் அரை மணி நேரம் கழித்து பிறகு திறந்து பார்த்தால் ரவையும் சேமியாவும் நன்றாக ஊறி இருக்கும்
  • ஊறிய ரவா மற்றும் சேமியா கலவையை இட்லிகளாக வார்த்து வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறினால் சுவையான சேமியா இட்லி தயார்.

Nutrition

Calories: 150kcal | Carbohydrates: 14g | Protein: 14g | Fat: 7g