- Advertisement -
சேமியா பாயசம், பாயச வகைகளில் மிகவும் எளிதான, மற்றும் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்று. பண்டிகை நாட்கள் மற்றும் பிறந்த நாட்கள் என எல்லா விசேஷமான நாட்களிலும் செய்யலாம்.பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் கல்யாண வீட்டு சேமியா பாயசம் செய்வது எப்படி ?
- Advertisement -
பாயாசங்களில் பல ரகம் உண்டு. அதில் பால் பாயாசம், பருப்பு பாயாசம், மற்றும் அவல் பாயாசம் முக்கியமானவை. இதில் பாலில் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யப்படும் சேமியா பால் பாயாசம் தென்னிந்தியாவில் பிரபலமானது.இப்பொழுது இந்த இனிப்பான சேமியா பாயாசத்தை செய்வதற்கு எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.
சேமியா பாயசம் | Semiya Payasam Recipe in Tamil
சேமியா பாயசம், பாயச வகைகளில் மிகவும் எளிதான, மற்றும் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்று. பண்டிகை நாட்கள் மற்றும் பிறந்த நாட்கள் என எல்லா விசேஷமான நாட்களிலும் செய்யலாம்.பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. பாயாசங்களில் பல ரகம் உண்டு. அதில் பால் பாயாசம், பருப்பு பாயாசம், மற்றும் அவல் பாயாசம் முக்கியமானவை. இதில் பாலில் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யப்படும் சேமியா பால் பாயாசம் தென்னிந்தியாவில் பிரபலமானது.
Yield: 4 People
Equipment
- 1 பெரிய பவுள்
- 1 கரண்டி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் சேமியா
- 1/ கப் ஜவ்வரிசி
- 3/ கப் சக்கரை
- 3/ கப் பால் காய்ச்சிய பால்
- 3 tbsp நெய்
- 4 ஏலக்காய்
- 2 முந்திரி
- 2 பாதாம்
- 2 உலர் திராட்சை
செய்முறை
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் மிதமான தீயில் வைத்து அதில் 3 மேசைக்கரண்டி நெய்யை ஊற்றவும். நெய் காய்ந்ததும் அதில் முந்திரியைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.
- முந்திரி சிவந்ததும் அதில் பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சையை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் இதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதே பாத்திரத்தில் சேமியாவை போட்டு சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.
- சேமியா பொன்னிறம் வந்ததும் அதை இறக்கி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒன்றரை கப் பால் சேர்த்து அதில் ஜவ்வரிசியை போட்டு ஜவ்வரிசி நன்கு கண்ணாடி போல் வரும் அளவிற்கு வேக வைக்கவும்.
- ஜவ்வரிசி நன்கு கண்ணாடி போல் வந்ததும் அதில் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சேமியாவை போட்டு நன்கு கிளறவும்.பின்னர் அதை நன்கு வேக வைக்கவும்.
- சேமியா நன்கு வெந்ததும் அதில் சர்க்கரை மற்றும் ஒன்றரைக் கப் பாலை சேர்த்து கலக்கவும். பின்னர் அதை கொதிக்க
- பாயாசம்நன்கு கொதித்ததும் அதில் ஏலக்காய் எடுத்து பொடித்து போடவும்.
- கடைசியாக நெய்யில் வறுத்து வைத்திருக்கும் பாதாம் முந்திரியை அதில் போட்டு ஒரு கிளறு கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
- இப்பொழுது உங்கள் சூடான, சுவையான, மற்றும் இனிப்பான சேமியா பாயாசம் தயார்.
- இதை ஒரு bowl ல் ஊற்றி சிறிது முந்திரி மற்றும் பாதாமை அதன் மேலே தூவி பரிமாறவும்.
Nutrition
Serving: 750g | Carbohydrates: 43.4g | Protein: 10.9g | Fat: 15.5g | Fiber: 0.4g | Vitamin A: 380IU | Vitamin C: 2.4mg