மதிய உணவுக்கு ஏற்ற சேனைகிழங்கு வறுவல் கூட்டு செய்வது எப்படி ?

- Advertisement -

சேனைக்கிழங்கு உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் இது புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மையை குறைக்கிறது. சேனைக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். சேனைக்கிழங்கில் வைட்டமின் சி இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : காரசாரமான உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி ?

- Advertisement -

உற்பத்தி செய்து இரத்த சோகையை குணமாகும். அதே நேரம் இந்த சேனை கிழங்கு வறுவலை உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சேனை கிழங்கு வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

சேனைகிழங்கு வறுவல் | Sennaikilangu Varuval Recipe in Tamil

சேனைக்கிழங்கு உடலில் பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு. இது உடலை வலுவடையச் செய்யும். இவ்ளோ மருத்துவ குணங்கள் நிறைந்த சேனைக்கிழங்கை வைத்து எப்படி வறுவல் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: SENAI KILANGU, சேனைக்கிழங்கு
Yield: 4 PERSON
Calories: 158kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பெரிய தட்டு

தேவையான பொருட்கள்

  • ½ KG சேனைகிழங்கு
  • 1 தேக்கரண்டி அரிசி மாவு
  • 1 தேக்கரண்டி கடலைமாவு
  • 1 தேக்கரண்டி சோளமாவு
  • 200 ML எண்ணெய்
  • 1 தேக்கரண்டி மிளகாய்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு                            
  • கருவேப்பிலை சிறிது
  • 4 PIECE மிளகாய்

செய்முறை

  • முதலில் நாம் வைத்திருக்கும் சேனைக்கிழங்கு தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். கழுவி எடுத்துக் கொண்ட சேனைக்கிழங்கை குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி சேனைக்கிழங்கை குக்கரில் வைத்து மூடி விடுங்கள்.
  • சேனைக்கிழங்கை இரண்டு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு விசில் வந்ததுடன் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி குக்கரில் பிரஷ்ரை ரிலீஸ் செய்து சேனைக்கிழங்கை ஆற வைக்கவும்.
  • சேனைக்கிழங்கு நன்றாக ஆறிய பின் மேற் புற தோலை சீவி எடுத்து பின் சேனைக்கிழங்கு சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது நறுக்கி வைத்திருக்கும் சேனைக்கிழங்கை இந்த கலவையில் போட்டு நன்றாக பிரட்டிக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடேறும் வரை காத்திருங்கள். உன்னை சூடேறியவுடன்.
  • அதில் கடுகு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும் இந்த தாளிப்பு முடிந்தவுடன் நீங்கள் கலந்து வைத்திருக்கும் சேனைக்கிழங்கை கடையில் போட்டு வறுத்து எடுங்கள்.
  • சேனைக்கிழங்கு இளஞ்சிவப்பு நிறத்தில் சிவந்து வரும் வரையில் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள் பின்பு சேனைக்கிழங்கு இறக்கி கொத்தமல்லி இலையே தூவி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான சேனைக்கிழங்கு வறுவல் இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Serving: 550gram | Calories: 158kcal | Carbohydrates: 13g | Protein: 21g | Fat: 1g | Saturated Fat: 0.2g | Potassium: 39mg | Fiber: 5g | Sugar: 0.5g

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here