நம் முன்னோர்களின் மருத்துவ குறிப்புகள்…தினம் 10 குறிப்புகள்.. PART – 3

- Advertisement -

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி உடல் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முறைகளை சேர்த்து, இந்த உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-

இரத்த பேதியை குணப்படுத்த :-

- Advertisement -

அத்திப்பட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை போன்ற பட்டைகளை சம அளவு எடுத்துக் கொண்டு பட்டைகளை பொடி செய்து கொள்ளவும். இப்படி தயார் செய்த பொடி 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி நோய்கள் குணமாகும்.

மூட்டு வலி குணமாக :-

அத்தி பாலை மூட்டு வலி உள்ள இடங்களில் தினந்தோறும் பற்று போட்டு வருவதன் மூலமாக மூட்டு வலியை எளிமையாக குணப்படுத்தி விடலாம்.

-விளம்பரம்-

நரம்பு தளர்ச்சி நீங்க :-

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகிவிடும்.

பற்கள் உறுதியாக இருக்க :-

-விளம்பரம்-

மாவிலையை பொடி செய்து அந்த பொடி வைத்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும், உறுதியாகவும் இருக்கும்.

சோற்றுப்புண் குணமாக :-

காய்ச்சிய வேப்ப எண்ணையை சோற்றுப்புண் உள்ள இடங்களில் தடவி வந்தால் சோற்றுப்புண் விரைவில் குணமாகி விடும்.

ஆண்மை குறைவு நீங்க :-

அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

மூலம் ரத்தம் வெளியேறுவதை நிறுத்த :-

வெங்காயச்சாறு 50 மில்லி, பசும்பால் 400ml, பசும் நெய், அதிமதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதம் ஆகும் வரை கொதிக்கவிட்டு பத்திரப்படுத்தி. இதனை நாள்தோறும் ஒரு கரண்டி ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வயிற்று வலி குணமாக :-

குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி வயிற்றுப்புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் செய்து சாப்பிடலாம்.

கருவுற்றிருக்கும் தாய்மார்கள் :-

கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமாக இருக்கும்.

வயிற்று பூச்சிகள் ஒழிய :-

வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை,மாலை இருவேளை சாப்பிடு வந்தால் வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.

மலச்சிக்கல் தீர :-

பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பணங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெயில் ஊற வைக்கவும் பாட்டிலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். மூன்று நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெயுடன் உட் கொள்ளவும் மலச்சிக்கல் தீரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here