நம் முன்னோர்களின் மருத்துவ குறிப்புகள்…தினம் 10 குறிப்புகள்.. PART – 5

- Advertisement -

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி உடல் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து எளிய நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முறைகளை சேர்த்து, இந்த உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-

பெண்களுக்கு பேறு கால வலி :-

- Advertisement -

முருங்கை இலை ஒரு கை பிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேக வைத்து. வேக வைத்த அந்த நீரை குடித்து வந்தால் பேறு கால வலி குறையும்.

தாது விருத்தியாக :-

பலாக்கொட்டையை அவித்து பின் காயவைத்து நன்றாக காய்ந்தவுடன் பவுடராக்கி அந்த பவுடரை கருப்பட்டியுடன் அல்லது பனங்கற்கண்டு உடன் சேர்த்து சாப்பிட தாது விருத்தி ஆகும்.

-விளம்பரம்-

நீர்த்தாரையில் எரிச்சல் குணமாக :-

அகத்தி வேரையும், அருகம்புல் வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் கசாயம் செய்து சாப்பிட்டு வர ஆண்குறியில் எரிச்சல் குணமாகும்.

செருப்பு கடி குணமாக :-

-விளம்பரம்-

தென்னை ஓலையை தனலில் போட்டு கருக்கி பட்டு போல் தூள் செய்து தேங்காய் எண்ணையில் குழப்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.

தலைவலி குணமாக :-

அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவி வந்தால் தலைவலி குணமாகும்.

சீதபேதி குணமாக :-

முருங்கைக்கீரை ஒரு கைப்பிடி அளவு, சோற்று உப்பு சிறிதளவு சேர்த்து வறுக்க வேண்டும். இலை சாம்பலாக மாறியதும் கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்த. இந்த சாம்பல் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் போட்டு இரண்டு வேலை குடிக்க சீதபேதி குணமாகும்.

நரை போக்க :-

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை மாறிவிடும்.

விந்து கட்டி பட :-

ஆலமரத்தின் இளம் கொழுந்தை மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, விந்து கெட்டிபடும்.

முடி வளர்வதற்கு :-

கருவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து அந்த எண்ணெயை காய்ச்சி தலையில் தேய்த்து வர தலைமுடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளரும்.

கருப்பு முடியாக மாற்ற :-

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணிடம் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும், முடி உதிர்வதையும் தடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here