சிவனின் அம்சத்தில் பிறந்த இந்த 4 ராசிக்காரர்கள் யார் யார் ? அவர்கள் செய்ய வேண்டிய தானம் என்னது !

- Advertisement -

பொதுவாக அனைத்து ராசிக்காரர்களும் சிவபெருமானின் அம்சத்தில் தான் உள்ளனர். ஏனென்றால் அனைத்து கடவுள்களுமே சிவபெருமானிலிருந்து பிரிந்தவர்கள் தான் என கூறப்படுகிறது. சிவனின் அம்சம் நிறைந்தவர்களாக இருப்பவர்கள் முதலில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் போல் காணப்படுவார்கள் அதன் பிறகு சிவன் மேல் ஈடுபாடு இல்லாதவர்கள் போல் காணப்படுவார்கள். ஆனால் அதன் பிறகு சிவன் மேல் நம்பிக்கை அதிகமாக காணப்படும். பெரும்பாலும் சிவன் அம்சத்தில் உள்ள ராசிக்காரர்களுக்கு அவர்களுக்கு தடங்கள் தடைகள் சோதனை போன்றவை ஏற்படும். இதற்குக் காரணம் சிவபெருமான் எப்பொழுதும் ஒரு மனிதனை சோதித்துப் பார்ப்பார். பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய சிவபெருமான், சில ராசிகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் கருணையும், சிறப்பு அருளையும் பொழிகிறார். சிவனின் நல்லருளை இயற்கையாகவே வாழ்நாள் முழுவதும் பெறக்கூடிய ராசிகள் யார் என்பதையும், அவர்கள் என்ன தானம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

-விளம்பரம்-

மேஷ ராசி

பொதுவாகவே மேஷ ராசிக்காரர்களுக்கு ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் பிடிக்கும். தெய்வத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களால் ஒரு காரியத்தை செய்ய இயலாத போது அதனை மற்றவர் நலனுக்காக மற்றவருக்கு பிரித்துக் கொடுத்து அந்த வேலையை சிறப்பாக முடிப்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகுந்த வாக்கு சாதுரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஒழிவு மறைவு இல்லாமல் பேசுவார்கள். தன் அன்புக்குரியவர்களுக்கு எந்த துன்பம் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராமல் உதவுவார்கள்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ஆறுமுகம் என்றும் வைத்தியநாதன் என்றும் அழைக்கக்கூடிய முருகப்பெருமானின் ராசியும் மேஷ ராசி தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சிவபெருமானின் அருளும் ஆசிர்வாதமும் எப்பொழுதும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுவாக மேஷ ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமானிடமும் முருகப்பெருமானிடமும் அதீத பக்தி வைத்திருப்பார்கள். இவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் சிவபெருமான் வழிபாடு செய்தால் அதிக நன்மை ஏற்படும்.

மேஷ ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானம்

மேஷ ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் அன்னதானம் செய்து, எம்பெருமானின் ஆசீர்வாதத்தை மேலும் மேலும் பெற்றுக்

கொள்வதன் மூலம் உங்களது வாழ்க்கை சிறப்படையும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

கடக ராசி

கடக ராசி காரர்கள் அம்பாளின் அம்சம் பொருந்தியவர்கள். அதாவது சந்திரன் பார்வதியின் அம்சம் பொருந்தியவர்கள். பார்வதியின் அம்சம் பொருந்திய கடக ராசியை சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக கடக ராசிக்காரர்கள் அனைவரது கஷ்டத்தையும் புரிந்து நடந்து கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் அதிக தாய் பற்று கொண்டவர்களும் இவர்கள் தான். மற்றவர்கள் மனது கஷ்டம் படும்படி ஒரு பொழுதும் நடந்து கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு கடன் வாங்குவது என்பது அறவே பிடிக்காத ஒரு விஷயம். பெற்றோர்கள் கடன் வாங்கி இருந்தாலும் தனது சொத்துகளை வித்தாவது அந்த கடனை அடைத்து விடுவார்கள். பார்வதியின் அம்சம் பொருந்திய இந்த கடக ராசிக்காரர்கள் மீது சிவனின் பார்வை படாமல் போகுமா என்ன?

கடக ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானம்

கடக ராசிக்காரர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் கஷ்டப்படும் பெண்களுக்கு உதவி செய்வது அதிகப்படியான பலனைப் பெற்றுத் தரும். அதாவது உடல் ஊனமுற்ற பெண்கள், படிக்க முடியாத பெண் குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து வரலாம்.

கன்னி ராசி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் கள்ளம் கபடம் இல்லாத மனம் தான் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் யார் எதனை சொன்னாலும் அப்படியே நம்பி விடுவார்கள். இந்த ராசியின் அதிபதி புதனாக இருப்பதினால் இந்த ராசிக்காரர்கள் அறிவாற்றல் உடையவர்களாகவும், புத்திசாலித்தனம் அதிகம் உள்ளவராகவும் இருப்பார்கள். தன்னிடம் இருக்கும் பொருளை ஒருபோதும் இல்லை என்று சொல்லாமல் மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதில் சிறந்தவர்கள் இவர்கள்தான். முடிந்தவரை மற்றவர்களுக்கு நன்மை மட்டுமே செய்யக்கூடிய இந்த கன்னி ராசிக்காரர்களும் எம்பெருமானுக்கு மிகவும் பிடித்தவர்களாகவே சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

கன்னி ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானம்

கன்னி ராசிக்காரர்கள் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பசுவிற்கு தானம் அளிக்கலாம். குறிப்பாக அகத்திக்கீரை, வாழைப்பழம் போன்ற பொருட்களை பசுவிற்கு வாங்கிக் கொடுக்கலாம். அது மட்டுமல்லாமல் கோதுமையால் ஆன உணவினை தானம் செய்வது மிகுந்த பலனைப் பெற்று தரும்.

கும்ப ராசி

உழைப்பையே உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும், பூரண கும்பத்தோடு வாழும், தகுதி பெற்றவர்கள் கும்ப ராசிக்காரர்கள். இவர்கள் எவ்வளவு கடினமான வேலையையும் எளிதில் செய்து முடித்து விடுவார்கள். இவர்கள் அன்பான சாந்தமான தோற்றம் கொண்டவர்கள் ஆனால் எல்லோரையும் வெகுளித்தனமாக நம்பி விடுவார்கள். எல்லோரும் நல்லவர்கள் தான் என்ற நம்பிக்கை வைத்து உதவியை செய்து விட்டு, ஏமாந்து நிற்கும் இவர்களையும் எம்பெருமானுக்கு மிகவும் பிடிக்குமாம். அடுத்தவங்க சந்தோஷமாக இருக்க, இவர்கள் கடன் வாங்கி செலவு செய்வார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் தான் கும்ப ராசிக்காரர்கள். ஆனால் கடைசியில் இவர்களுக்கே பிரச்சினை திரும்பும் என்பது கூட தெரியாத அளவிற்கு வெகுளி குணம் கொண்டவர்கள்.

கும்ப ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானம்

கும்ப ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் உங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்யுங்கள். அன்னதானம், ஆடை தானம் போன்ற பொருட்களை இல்லாதோர்க்கு தானம் செய்வது உங்களது வாழ்க்கையை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : ஒரே ராசியை சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா!