இந்த மாங்காய் சீசன் இல்லையே இந்த சூப்பரான இனிப்பு மாங்காய் ஒரு தடவை செஞ்சுருங்க

- Advertisement -

சம்மர் வந்தாலே வெயிலோடு சேர்ந்து மாங்கா சீசனும் வந்துடும். இந்த மாங்காய் சீசன் இருக்கும் போது தான் மாங்காய் ரொம்ப கம்மியான விலைக்கு கிடைக்கும் அப்பவே மாங்காய் வச்சு என்னலாம் ஸ்டோர் பண்ணி செய்ய முடியுமோ அதை

-விளம்பரம்-

 செஞ்சு வச்சுகிட்டோம் அப்படின்னா அடுத்த ஒரு ஆறு மாசத்துக்கு நம்மளுக்கு எப்ப எல்லாம் வாங்க சாப்பிடணும்னு தோணுதோ அப்ப எல்லாம் அதை எடுத்து சாப்பிட்டுக்கலாம். உதாரணமா மாங்காய் வத்தல் இனிப்பு மாங்காய் வத்தல் மாங்காய் ஊறுகாய் அப்படின்னு மாங்காய் வைத்து செய்யக்கூடிய எல்லாமே இந்த சம்மர்லையே மாங்காய் சீசன் இடையே செஞ்சு வச்சுக்கணும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம சூப்பரான ரொம்பவே ஈசியான இனிப்பு மாங்காய் தான் செய்யப் போறோம்.

- Advertisement -

இந்த இனிப்பு மாங்காய் செய்வதற்கு ரெண்டே பொருட்கள் போதும் மாங்காயும் சர்க்கரையும் இருந்தா போதும் ஆறு மாசத்துக்கு வச்சு சாப்பிடக்கூடிய இனிப்பு மாங்காய் செய்யலாம் குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க ஈவினிங் டயத்துல ஸ்நாக்ஸ்க்கு இந்த இனிப்பு மாங்காய் நம்ம கொடுக்கலாம் அது மட்டும் இல்லாம ஸ்கூலுக்கும் இந்த இனிப்பு மாங்காயை கொடுத்துவிடலாம் வீட்டிலேயே செய்வது ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். ரொம்ப பெரிய ஈசியா சூப்பரா செய்யக்கூடிய இந்த இனிப்பு மாங்காய் எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.

இனிப்பு மாங்காய் செய்தது ரொம்பவே ஈஸியான ஒரு வேலை தான் சமைக்கவே தெரியாதவங்க கூட இதை ஈஸியா செஞ்சு முடிச்சிடலாம். நல்லா காயவச்சு ஒரு டப்பால போட்டு அடச்சி வச்சிட்டா தோணும்போது எல்லாம் எடுத்து சாப்பிட்டுக்கலாம். உங்க வீட்ல மாங்காய் நிறைய இருந்தா கண்டிப்பா இதை செஞ்சு வச்சுக்கோங்க மாங்காய் இருக்கும் அதே நேரத்துல இதை வச்சு நீங்க ஸ்டோர்  பண்ணி சாப்பிட்டுக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான இனிப்பு மாங்காய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

இனிப்பு மாங்காய் | Sweet Mango Recipe In Tamil

இனிப்பு மாங்காய் செய்வதற்கு ரெண்டே பொருட்கள் போதும் மாங்காயும் சர்க்கரையும் இருந்தா போதும் ஆறு மாசத்துக்கு வச்சு சாப்பிடக்கூடிய இனிப்பு மாங்காய் செய்யலாம் குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க ஈவினிங் டயத்துல ஸ்நாக்ஸ்க்கு இந்த இனிப்பு மாங்காய் நம்ம கொடுக்கலாம் அது மட்டும் இல்லாம ஸ்கூலுக்கும் இந்த இனிப்பு மாங்காயை கொடுத்துவிடலாம் வீட்டிலேயே செய்வது ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். ரொம்ப பெரிய ஈசியா சூப்பரா செய்யக்கூடிய இந்த இனிப்பு மாங்காய் எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: sweets
Cuisine: snacks
Keyword: Sweet Mango
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 மாங்காய்
  • 2 கப் சர்க்கரை
  • 3 டேபிள் ஸ்பூன் பொடியாக்கிய சர்க்கரை

செய்முறை

  • முதலில் மாங்காயை கழுவி சுத்தம் செய்து கொஞ்சம் தடிமனாக நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்
     
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கி இந்த மாங்காய் சேர்த்து மூன்று நிமிடங்கள் மட்டுமே வேக வைக்கவும்
  • அதற்குமேல் வேக வைத்தால் மாங்காய் குழைந்து விடும் எனவே 3 நிமிடங்கள் மட்டுமே வேக வைக்க வேண்டும்.
  • இரண்டு நாட்கள் நன்றாக சர்க்கரையில் ஊற வைக்கவும் இடையிடையேஎடுத்து குலுக்கி விடவும்.
  • பிறகு அதனை இரண்டு நாட்களுக்கு நன்றாக வெயில் காய வைக்க வேண்டும்.
  • இடையிடையே அந்த மாங்காயை எடுத்து வேறு தட்டில் மாற்றி காய வைக்க வேண்டும்.
  • நன்றாக மாங்காய் காய்ந்தவுடன் அதன் பொடியாக்கிய சர்க்கரையை தூவி டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொண்டால் மூன்று மாதங்கள் வரை அப்படியே இருக்கும்.
  • இப்பொழுது சுவையான இனிப்பு மாங்காய் தயார்

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Sodium: 209mg | Potassium: 362mg

இதையும் படியுங்கள் : சூப்பரான சம்மர் ரெசிபி வீட்டிலயே ரெம்ப ஈஸியாக செய்யலாம் மாம்பழ கஸ்டர்ட் இப்படி ட்ரை பண்ண பாருங்க!

-விளம்பரம்-