Advertisement
ஸ்நாக்ஸ்

ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!

Advertisement

மாலை நேரத்தில் சுட சுட டீ, காபியுடன் என்ன சாப்பிடலாம் என்று தோன்றுகிறதா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா இப்படி ஒரு முறை செஞ்சி டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் பாண்டிச்சேரி சிக்கன் போண்டா செய்வது எப்படி ?

Advertisement

அதுமட்டும் அல்லாமல் சர்க்கரைவள்ளி கிழங்கில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது, அதனால் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா | Sweet Potato Bonda Recipe In Tamil

Print Recipe
மாலை நேரத்தில் சுட சுட டீ, காபியுடன் என்ன சாப்பிடலாம் என்று தோன்றுகிறதா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா இப்படி ஒரு முறை செஞ்சி டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் சர்க்கரைவள்ளி கிழங்கில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது, அதனால் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானதும் கூட.
Course evening, snacks
Cuisine Indian, TAMIL
Keyword kilangu bonda, சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 20 minutes
Total Time 16 minutes
Servings 4 people
Calories 200

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 3 சர்க்கரைவள்ளி கிழங்கு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
  • 1 டீஸ்பூன் கறிமசாலா தூள்
    Advertisement
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் பெருங்காயப்பொடி
  • ½ கப் கடலை மாவு
  • 2 ஸ்பூன் அரிசிமாவு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • கருவேப்பிலை பொடியாக நறுக்கியது கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை நன்கு வேக வைத்து மசித்துவைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கறிமசாலா, மிளகாய் தூள், பெருங்காய பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பௌலில் மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கு, அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, சோம்பு, கறிவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு, வதக்கிய மசாலாவை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு போண்டா தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 200kcal | Carbohydrates: 57g | Protein: 12g | Fat: 2g | Saturated Fat: 0.5g | Fiber: 10g | Sugar: 1.5g
Advertisement
swetha

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

8 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

8 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

8 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

9 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

9 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

13 மணி நேரங்கள் ago