Advertisement
அசைவம்

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

Advertisement

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை போண்டா ஒரு தனி எமோஷன் அப்படின்னு சொல்லலாம். முட்டை போண்டாளே அவ்ளோ டேஸ்ட் இருக்கும் முட்டையையும் அந்த போண்டாவையும் சேர்த்து ஒரு கடி கடிக்கும் போது சூப்பரான ஒரு ஃபீல் கொடுக்கும் அப்படின்னு சொல்லலாம் இப்பதான் கடைகள்ல அவளை முட்டை போண்டா போடுறது இல்ல ஆனா அப்பலாம் பல இடங்களில் நமக்கு முட்டை போண்டா கிடைக்கும்.

ஆனா கடைகள்ல கிடைக்கிற முட்டை போண்டா இப்ப எல்லாம் ஆரோக்கியமானதா இருக்க மாட்டேங்குது அதனால நம்ம கிட்ட நாலு முட்டையும் கொஞ்சம் கடலைமாவும் இருந்தா போதும் வீட்டில் இருக்கிற இன்னும் சில பொருட்களை வைத்து சூப்பரான முட்டை போண்டா நமக்கு புடிச்ச மாதிரியான காரத்தோட செஞ்சு சாப்பிடலாம் சாயந்திர நேரத்தில இந்த முட்டை போண்டாவும் ஒரு கப் காபியும் குடிச்சா அதுதாங்க சொர்க்கம் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.

Advertisement

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட இந்த முட்டை போண்டாவை செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைங்க லீவுல வீட்ல இருக்காங்க அவங்களுக்கு இந்த மாதிரி ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க அவங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். என்னை பலகாரம் உடம்புக்கு கெடுதிதான் ஆனா எப்ப வாச்சும் ஒரு தடவை செஞ்சு கொடுங்க ஒன்னும் ஆகாது இப்ப வாங்க இந்த சூப்பரான முட்டை போண்டாவை இந்த ஸ்டைலில் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்

முட்டை போண்டா | Egg Bonda Recipe In Tamil

Advertisement
Print Recipe
முட்டை போண்டா இப்ப எல்லாம் ஆரோக்கியமானதா இருக்க மாட்டேங்குது அதனால நம்ம கிட்ட நாலு முட்டையும்கொஞ்சம் கடலைமாவும் இருந்தா போதும் வீட்டில் இருக்கிற இன்னும் சில பொருட்களை வைத்துசூப்பரான முட்டை போண்டா நமக்கு புடிச்ச மாதிரியான காரத்தோட
Advertisement
செஞ்சு சாப்பிடலாம் சாயந்திரநேரத்தில இந்த முட்டை போண்டாவும் ஒரு கப் காபியும் குடிச்சா அதுதாங்க சொர்க்கம் அந்தஅளவுக்கு சூப்பரா இருக்கும்.குழந்தைங்க லீவுல வீட்ல இருக்காங்க அவங்களுக்கு இந்தமாதிரி ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க அவங்களுக்கு ரொம்பவேபிடிக்கும்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword egg bonda
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4
Calories 92

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 4 முட்டை
  • 1/4 கப் கடலை மாவு
  • 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 2 டீஸ்பூன் மைதா மாவு
  • 1 சிட்டிகை சோடா உப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முட்டையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதனை ஆற வைத்துதோல் உரித்து இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மைதா மாவு மிளகாய்த்தூள் உப்பு பெருங்காயத்தூள் சீரகம் தேவையானஅளவு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்
  • பிறகு முட்டையை மாவிற்குள் முக்கி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான முட்டை போண்டா தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 92kcal | Carbohydrates: 24g | Protein: 31g | Fat: 1g | Saturated Fat: 0.5g
Advertisement
Ramya

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

7 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

7 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

8 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

9 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

13 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

13 மணி நேரங்கள் ago