தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர், பன்னீர் கீர் என்று ‌சொல்லிக் கொண்டே செல்லலாம். இன்று நாம் பார்க்க இருப்பது ஆப்பிள் கீர். ஆப்பிள் சத்தான உணவு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆப்பிள் கீர் பொதுவாக விரதங்களின் போது தயாரிக்க

By Prem Kumar · 29/4/2024

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர், பன்னீர் கீர் என்று ‌சொல்லிக் கொண்டே செல்லலாம். இன்று நாம் பார்க்க இருப்பது ஆப்பிள் கீர். ஆப்பிள் சத்தான உணவு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆப்பிள் கீர் பொதுவாக விரதங்களின் போது தயாரிக்கப்படுகிறது.

ஆனால் இது பண்டிகைகளின் போது அல்லது இனிப்பு சாப்பிடும் போது கூட செய்யலாம். ஏலக்காயின் நறுமணத்தையும், ஆப்பிளின் இனிப்புச் சுவையையும் வெளிப்படுத்துவதால், இந்த கீர் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் முழு குடும்பத்திற்கும் மிகவும் பிடிக்கும். ஆப்பிள்களில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது நம்முடைய குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், இதனில் வைட்டமின் C மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

பொதுவாக குழந்தைகளை பற்றி நாம் சொல்ல வேண்டுமெனில், அவர்களுக்கு பால் சாப்பிட பிடிக்காது. ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடவும் பிடிப்பதில்லை. இது போன்ற சூழலில், நாம் பாலையும், பழங்களையும் வேறு சில சுவாரஸ்யமான வழிகளில் கொடுக்க முயல்வது சிறந்தது. அதற்கு தான் இந்த இனிப்பான, ஆரோக்கியமான ஆப்பிள் கீர். இதனை எப்படி செய்வது என்பதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full