Advertisement
ஸ்நாக்ஸ்

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

Advertisement

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும். அந்த வகையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட பிடிக்கும். கடைகளில் இருந்து பஜ்ஜி வடை போண்டா எல்லாமே வாங்கிட்டு வந்து சாப்பிடுவாங்க ஒரு சிலர் பப்ஸ் ரோல் அந்த மாதிரி வாங்கி சாப்பிட வாங்க. அந்த கடையில வாங்கக்கூடிய சில உணவுகள் நேமே கூட ஒருத்தருக்கு பஜ்ஜி பிடிக்கும் ஒருத்தருக்கு போண்டா பிடிக்கும் ஒருத்தருக்கு வடை பிடிக்கும்

ஆனால் கண்டிப்பா எல்லாருக்குமே வெங்காயம் வடை ரொம்ப பிடிக்கும் அந்த வெங்காய வடையை கடையில் போய் வாங்கி சாப்பிடாம நம்ம வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சூப்பர் டேஸ்ட்ல செஞ்சு சாப்பிடலாம். ரெண்டு வெங்காயம் இருந்தா போதும் நம்மளோட ஈவினிங் டைமே ஒரு காபி இந்த வெங்காய வடையோட சூப்பரா முடியும். கண்டிப்பா நீங்களும் இந்த வெங்காய வடைய இந்த மாதிரி ஒரு முறையில செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மொறுமொறுன்னு சாப்பிடுறதுக்கே ரொம்ப ருசியா இருக்கும்.

Advertisement

கடையில போய் காசு கொடுத்து வாங்கணும் அப்படின்ற அவசியமே கிடையாது நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து இந்த வெங்காய வடையை செஞ்சிடலாம் எப்படியும் நம்ம வீட்ல எப்பவுமே வெங்காயம் கடலை மாவு எல்லாமே இருக்கும் அதனால வீட்டிலேயே இந்த வெங்காய வடைய சுலபமான முறையில் ஆரோக்கியமான முறையில செஞ்சிடலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான வெங்காய வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

வெங்காய வடை | Onion Vadai Recipe In Tamil

Advertisement
RecipeMaker.userRating.enter(this)" onfocus="window.WPRecipeMaker.userRating.enter(this)" onmouseleave="window.WPRecipeMaker.userRating.leave(this)" onblur="window.WPRecipeMaker.userRating.leave(this)" >
Print Recipe
வெங்காய வடைய இந்த மாதிரி ஒரு முறையில செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மொறுமொறுன்னு சாப்பிடுறதுக்கே ரொம்ப ருசியா இருக்கும். கடையிலபோய் காசு கொடுத்து வாங்கணும் அப்படின்ற அவசியமே கிடையாது நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை வைத்து இந்த வெங்காய வடையை செஞ்சிடலாம் எப்படியும் நம்ம வீட்ல எப்பவுமே வெங்காயம் கடலை மாவு எல்லாமே இருக்கும்
Advertisement
அதனால வீட்டிலேயே இந்த வெங்காய வடைய சுலபமான முறையில் ஆரோக்கியமான முறையில செஞ்சிடலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான வெங்காய வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Course snacks
Cuisine tamil nadu
Keyword Onion Vada
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4
Calories 91

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 3 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 கப் கடலை மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.
  • அதனுடன் கடலை மாவு,அரிசி மாவு ,மிளகாய் தூள் சோம்பு, கருவேப்பிலை பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்து உங்களுக்கு தேவையான வடிவத்தில் வடையாக போட்டு நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான வெங்காய வடை தயார்

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 1g | Iron: 1mg

இதையும் படியுங்கள் : கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

Advertisement
Ramya

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

48 நிமிடங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

11 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

21 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago