Advertisement
ஆன்மிகம்

இன்று தை அம்மாவாசை என்ன சிறப்பு ? சனி பகவானை எப்படி சாந்தபடுத்துவது!

Advertisement

இன்றைய நாளில் என்ன சிறப்பு என்று உங்களுக்கு தெரியுமா ? புராணங்கள் கூறுவது படி அன்னை அபிராமி தேவியார் அம்மாவாசை நாளான இன்று வானில் பௌர்ணமியை கொண்டு வந்து உலோகிற்கு இருளை நீக்கி வெளிச்சம் கொடுத்த நாள். இந்த நாளில் தான் அபிராமி தேவியாரை நினைத்து பாடும் சகல கஷ்டங்களையும் நீக்கும் சக்தி மிக்க அபிராமி அந்தாதி பாடல்கள் பாடப்பட்ட நாள் இன்று. அதனால் இந்த தை அமாவாசை நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்ற சாஸ்திர ஐதீகங்கள் கூறுகின்றனர்.

தை அம்மாவாசை

பொதுவாக மீத நாட்களில் வருகின்ற அமாவாசையில் அம்மாவாசை திதி இந்த நாட்களில் பாதி அடுத்த நாளில் பாதி என்று குழப்பமான முறையில் வரும். பலருக்கு எப்போது வழிபட வேண்டும் என்பதில் சந்தேகம் இருக்கும். ஆனால் இன்று இந்த தை அமாவாசையில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் இன்று நாள் முழுவதும் அமாவாசை திதி இருக்கும் என்பதால் காலையிலேயே எழுந்து சுத்தகமாக குளித்துவிட்டு நமது முன்னோர்கள் ஆன பித்ருக்களை வேண்டி நாம் செய்யும் சடங்கான தர்ப்பணம், திதி, பித்ரு கடன் வரை அனைத்தையும் செய்யலாம். இப்படி நாம் செய்யும்போது நமது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவதற்கு நம் முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள்.

Advertisement

முன்னோர்கள் ஆசி

இப்படி இந்த அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது அவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து நாம் மகிழ்சியாக வாழ்வதற்கு ஆசி வழங்குவார்கள். ஆனால் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறையாக செய்யாமல் தவறும் பட்சத்தில் நாம் குலதெய்வம், நவகிரகங்கள் முதல் நாம் கும்பிடும் இஷ்ட தெய்வம் என எந்த கடவுள்களை விழுந்து விழுந்து கும்பிட்டாலும் அவர்கள் அருள் நமக்கு கிடைக்காது. எப்படிப்பட்ட பூஜை வழிபாட்டை நாம்

Advertisement
செய்தாலும் அது நமக்கு பலன் தராது. அதனால் இன்று நாம் முன்னோர்களை முறையாக வழிபட்டு தர்ப்பணம் செய்யுங்கள்.

சனி பகவானை சாந்த படுத்த

அப்படிப்பட்ட இந்த தை அமாவாசை இன்று சனிக்கிழமை வருகிறது சனீஸ்வர பகவானுக்கு ஊரிய தினத்தில் வருகிறது. அதனால் நம் வாழ்க்கையில் கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் சனி பகவானின்

Advertisement
பூரண அருளும் நமக்கு கிடைக்க வேண்டும். அதற்கு நாம் முதலில் சனி பகவான் மனதை குளிர வைக்க வேண்டும். அதற்கு சனி பகவானின் வாகமான காகத்திற்கு கருப்பு எள் மற்றும் வீட்டில் வடித்த புதிய சாதத்துடன் கலந்து காகத்திற்கு உணவு படைக்க வேண்டும். மேலும் இந்த நாட்களில் கண் தெரியாத, நடக்க முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள். குறிப்பாக கால் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஊன்றுகோல் வாங்கி கொடுங்கள். நாம் இப்படி செய்வதால் சனி பகவான் மனம் குளிரும்.

நிம்மதியான வாழ்க்கை

இந்து புராணங்களின்படி சனி பகவான் ஒரு நீதியின் கடவுளாகவே காட்சியளிக்கிறார். அதனால் இப்படி நாம் சனி பகவானே வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்து தர்ம வழியில் நடப்பதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்பவர்களுக்கு எப்போதும் தனது பரிபூரண அருளை அள்ளி கொடுப்பார். அதனால் இன்றைய தை அமாவாசை நாளில் முன்னோர்களை வேண்டி அவர்களுக்கு முறையாக செய்ய வேண்டிய தர்ப்பணத்தை செய்து, சனி பகவானின் மனதை குளிர வைத்து சகல சௌபாக்கியங்களையும் பெற்று ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழுங்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

3 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

3 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

5 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

8 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

8 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

9 மணி நேரங்கள் ago