சுவையான ராகி பால்ஸ் இப்படி செய்து கொடுங்கள். வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்!

- Advertisement -

டேஸ்டி ராகி பால்ஸ் எக்கச்சக்கமான சத்துக்களை உள்ளடக்கியது. எள்ளில் அபரிமிதமான சத்து உள்ளதோடு நன்கு சதை பிடிப்பாக உடம்பையும் வைத்திருக்கும். இரும்புச் சத்து நிறைய உள்ளது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும் அற்புத ரெசிபி இது. ஆரோக்கியமான உணவைப் பெற்றால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அத்தகைய ஆரோக்கியமான சிற்றுண்டி உணவுகளில் ஒன்று ராகி பால்ஸ். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மிகவும் சுவையாகவும் இருக்கும். மேலும் தயாரிக்க மிகக் குறைந்த நேரமே ஆகும். ஒரு முறை சாப்பிட்ட பிறகு, தினமும் சிற்றுண்டி உணவாக சாப்பிட விரும்புவீர்கள். சுத்தமான வீட்டில் தயாரிக்கும் நெய்யில் செய்தால் அதன் சுவை இரட்டிப்பாகும்.

-விளம்பரம்-
Print
No ratings yet

ராகி பால்ஸ் | Ragi Balls Recipe In Tamil

டேஸ்டி ராகி பால்ஸ் எக்கச்சக்கமான சத்துக்களை உள்ளடக்கியது. எள்ளில் அபரிமிதமான சத்து உள்ளதோடு நன்கு சதை பிடிப்பாக உடம்பையும் வைத்திருக்கும். இரும்புச் சத்து நிறைய உள்ளது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும் அற்புத ரெசிபி இது. ஆரோக்கியமான உணவைப் பெற்றால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அத்தகைய ஆரோக்கியமான சிற்றுண்டி உணவுகளில் ஒன்று ராகி பால்ஸ். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மிகவும் சுவையாகவும் இருக்கும். மேலும் தயாரிக்க மிகக் குறைந்த நேரமே ஆகும். ஒரு முறை சாப்பிட்ட பிறகு, தினமும் சிற்றுண்டி உணவாக சாப்பிட விரும்புவீர்கள். சுத்தமான வீட்டில் தயாரிக்கும் நெய்யில் செய்தால் அதன் சுவை இரட்டிப்பாகும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Dessert, snacks
Cuisine: tamilnadu
Keyword: Ragi Balls
Yield: 4
Calories: 328kcal

Equipment

  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கேழ்வரகு மாவு
  • 1/2 கப் வெல்லப்பொடி
  • 1/2 கப் பொடித்த வேர்க்கடலை
  • 1 டேபிள்ஸ்பூன் வறுத்த எள்ளு
  • 1 சிட்டிகை உப்பு
  • 4 டீஸ்பூன் நெய்

செய்முறை

  • கேழ்வரகு மாவுடன் ஒரு சிட்டிகை உப்பை நன்கு கலந்து, திட்டமாக தண்ணீர் தெளித்து அடை மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின்பு தோசைக் கல்லை சூடாக்கி அதில் மாவை மெல்லிய அடைகளாகத் தட்டி வெந்த பின் எடுத்து வைக்கவும். அடைகள் ஆறிய பிறகு சிறு துண்டங்களாக பிய்த்து மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
  • வேர்க்கடலை மற்றும் வெல்லத்தை தனித்தனியே மிக்சியில் அரைத்து வைக்கவும். கடைசியாக கேழ்வரகு அடை, வெல்லம், வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சேர சுற்றவும்.
  • இந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி, வறுத்த எள்ளின் மீது புரட்டி எடுக்கவும். டேஸ்டி ராகி பால்ஸ் தயார் .

Nutrition

Serving: 100g | Calories: 328kcal | Carbohydrates: 72g | Protein: 7.3g | Fat: 1.3g | Fiber: 11.5g | Iron: 6.3mg
- Advertisement -