தீபாவளியில் தட்டைவடை நீங்களும் உங்கள் வீட்டில் சுலபமாக இந்த முறையில் செய்து அசத்தலாம்!

- Advertisement -

தீபாவளி பண்டிகை வந்தாச்சு பலகாரங்களுக்கு ரெடி பண்ண வேண்டும். அப்படி தீபாவளிக்கு தீபாவளி பண்ற பலகாரமான தட்டு வடை எப்படி பண்றது அப்படின்னு பார்க்கலாம். இது எல்லா ஊர்லயும் தட்டு வடை, ஓட்டை வடை அப்படின்னு சொல்லுவாங்க. எங்க ஊர்ல இது பேரு எள்ளடை. எள்ளடை எப்படி செய்றதுனு இந்த பதிவுல பார்க்கலாம். 

-விளம்பரம்-

எள்ளடைகளை ஒரு ரூபாய்க்கு இரண்டு வாங்கி சாப்பிடுற சுகமே தனி சுகம் தான். 90களில் பள்ளிக்கூடம் முடிந்து வரும்போது பொட்டி கடையில நின்னு எள்ளடை தேன் மிட்டாய், பால்கோவா, பால்பன், ஆரஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு வரும்போது காரத்துக்கு முதலிடம் கொடுக்கிறது இந்த எள்ளடைக்கு தான் அதாவது தட்டுவடைக்கு. அப்படியே சுவையான தட்டு வடையை எப்படி ரொம்பவே டேஸ்டா மொறு மொறுன்னு செய்யலாம்.

- Advertisement -

இந்த எள்ளடை எவ்ளோ ருசியா இருக்கும்னா சாப்பிட்டே இருக்கலாம்னு தோணும். நமக்கு சும்மாவே ஸ்நாக்ஸ் சாப்பிடணும் அப்படின்னா எக்ஸ்ட்ராவா சாப்பிட்டே இருக்கணும்னு தோணும். அதுலயும் இந்த எள்ளடை இன்னும் அதிகமா சாப்ட்டே இருக்கணும் என்கிற ஒரு உணர்வு கொடுத்துட்டே இருக்கும்.

அதனால ஸ்னாக்ஸ் சாப்பிட்டு வெயிட் போட்டுருவோம் அப்படின்னு நினைக்கிறவங்க எல்லாம் சுவைக்கு  விருப்பபட்டு சாப்பிடாம ஆசைக்காக ரெண்டு சாப்டுக்கோங்க. வெயிட்ட பத்தி கவலைப்படாதவங்க எவ்வளவு வேணுமோ அவ்வளவு சாப்டுக்கோங்க. ஏன்னா அந்த அளவுக்கு ருசியா இருக்கும் இந்த தட்டு வடை .சரி இந்த தட்டு வடை எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
4.67 from 3 votes

தட்டைவடை | Thattai Vadai Recipe In Tamil

தட்டு வடை எப்படி செய்றதுனு இந்த பதிவுல பார்க்கலாம்.  தட்டு வடை,எள்ளடை, ஓட்டை வடை அப்படின்னு சொல்லுவாங்க.எள்ளடைகளை ஒரு ரூபாய்க்கு இரண்டு வாங்கி சாப்பிடுற சுகமே தனி சுகம் தான். 90களில் பள்ளிக்கூடம் முடிந்து வரும்போது பொட்டி கடையில நின்னு எள்ளடை தேன் மிட்டாய், பால்கோவா, பால்பன், ஆரஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு வரும்போது காரத்துக்கு முதலிடம் கொடுக்கிறது இந்த எள்ளடைக்கு தான் அதாவது தட்டுவடைக்கு. அப்படியே சுவையான தட்டு வடையை எப்படி ரொம்பவே டேஸ்டா மொறு மொறுன்னு செய்யலாம்.
Prep Time5 minutes
Active Time15 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: thattu vadai set
Yield: 10
Calories: 360kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசிமாவு
  • 3 ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 4 பல் பூண்டு
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 சிட்டிகை பெருங்காயம்
  • உப்பு தேவையானஅளவு
  • 1 ஸ்பூன் எள் 
  • எண்ணெய் தேவையானஅளவு                              

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து பச்சரிசி மாவை லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.  பிறகுகடலைப்பருப்பு ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பச்சரிசிமாவில் ஊற வைத்துள்ள கடலைப்பருப்பு,மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு மிளகு பூண்டை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் ஒன்று இரண்டாக உடைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த மிளகு பூண்டை கலந்து வைத்துள்ள அரிசி மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • கறிவேப்பிலையை அலசி விட்டு பொடியாக நறுக்கி அதையும் அரிசி மாவில் சேர்த்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக் கொள்ளவும்.
  • சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பட்டர் ஷீட் அல்லது வாழை இலையில் நன்றாக எண்ணெய் தடவிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
  •  பிறகு எண்ணெய் தடவி வைத்துள்ள வாழை இலை அல்லது பட்டர் ஷீட்டில் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து மேலே இன்னொரு ஒரு பட்டர் சீட்டில் எண்ணெய் தடவி மூடி ஒரு கிண்ணம் அல்லது சின்ன தட்டால் அந்த உருண்டையை லேசாக அழுத்தவும் இப்பொழுது வட்ட வடிவமான எள் அடை தயாராக இருக்கும்.
  • பிறகு அந்த பட்டர் ஷீட்டில் இருந்து எள்ளடையை எடுத்து காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரிக்கவும். இரண்டு புறமும் நன்றாக திருப்பி போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மொறு மொறு தட்டு வடை தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 360kcal | Carbohydrates: 16g | Protein: 30.5g | Fat: 6g | Saturated Fat: 2.9g | Sodium: 2.9mg | Potassium: 6.1mg | Fiber: 0.6g