Home ஸ்நாக்ஸ் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிட இந்த டீக்கடை இனிப்பு போண்டாவை இப்படி செய்து...

மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிட இந்த டீக்கடை இனிப்பு போண்டாவை இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

பொதுவா எல்லாருக்குமே டீ கடையில போடுற உளுந்த வடை, கார் போண்டா, மெதுவடை, இனிப்பு போண்டா, பஜ்ஜி னு எல்லாமே ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு ஒவ்வொன்னு பேவரட்டா இருக்கும். அந்த அளவுக்கு நமக்கு டீக்கடையில் போடுற எல்லா ஐட்டமும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-

ஆனா இப்போ டீ கடையில எல்லாம் பயன்படுத்தினால் என்னை திரும்பி திரும்பி பயன்படுத்துறாங்க. அதனால நம்ம போய் வாங்கி சாப்பிட ரொம்பவே யோசிக்கிறோம். அதே நேரத்தில் அந்த டீ கடையில செய்ற எல்லாமே நமக்கு விருப்பமானதாகவும் இருக்கு. அப்போ நம்ம அந்த டீக்கடையில செய்ற எல்லாத்தையும் வீட்லயே முயற்சி செஞ்சு பார்க்கணும் அப்படின்னு நினைப்போம். அந்த வகையில இன்னைக்கு எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச டீக்கடை போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சாயங்காலம் டீ, காபி குடிக்கிறப்போ நமக்கு ஏதாவது சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா இந்த டீக்கடை போண்டாக முயற்சி செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம். சுவையும் ரொம்ப அருமையா இருக்கும். இப்ப வாங்க அந்த டீக்கடை போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
4.50 from 2 votes

டீக்கடை போண்டா | Tea kadai Bonda Recipe In Tamil

டீ கடையில எல்லாம் பயன்படுத்தினால் என்னை திரும்பி திரும்பி பயன்படுத்துறாங்க. அதனால நம்ம போய்வாங்கி சாப்பிட ரொம்பவே யோசிக்கிறோம். அதே நேரத்தில் அந்த டீ கடையில செய்ற எல்லாமேநமக்கு விருப்பமானதாகவும் இருக்கு. அப்போ நம்ம அந்த டீக்கடையில செய்ற எல்லாத்தையும்வீட்லயே முயற்சி செஞ்சு பார்க்கணும் அப்படின்னு நினைப்போம். அந்த வகையில இன்னைக்குஎல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச டீக்கடை போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Tea Kadai Bonda
Yield: 4

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் மைதா மாவு
  • 3 ஏலக்காய்
  • 1 கப் சர்க்கரை
  • 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • நெய் தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள சர்க்கரை கலவையையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
  • அதனுடன் பேக்கிங் பவுடரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் இலகுவாக அந்த மாவை பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும் கையில் எடுத்த கீழே போட்டால் அந்தமாவு கீழே விழுக வேண்டும் அந்த அளவிற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்
  • அந்த மாவு காய்ந்து போகாமல் இருக்க மேலே சிறிதளவு நெய்யை தடவி ஒரு மணி நேரத்திற்கு மூடி வைத்துஊற வைக்க வேண்டும்
  • ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன்போட்டு எடுத்தால் டீக்கடை போண்டா தயார்.