மொறு மொறுன்னு சூப்பரான ரிப்பன் பகோடா இப்படி செஞ்சு பாருங்க! கடையில் வாங்குவதை விட இதோட சுவை சூப்பராக இருக்கும்!

- Advertisement -

டென்ட் கொட்டாய் அப்படின்னா இங்க நிறைய பேருக்கு தெரியாது இப்ப இருக்குற திரையரங்குகள் தான் அப்ப டென்ட் கொட்டாய் அப்படிங்கற பேர்ல இருந்துச்சு. எல்லா கீத்து கொட்டாயில தரையில் உட்கார்ந்து படம் பார்பார்கள். அந்த மாதிரி டென்ட் கொட்டாய்கள்ல கிடைச்ச போண்டா மாதிரி சுவையான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி கிடையாது. இப்ப எல்லாம் பாப்கான் ஹார்ட் டாக்ஸ் அந்த மாதிரி நிறைய வந்துருச்சு இருந்தாலும் இந்த பழைய காலத்து திரையரங்குகளில் வாங்கி சாப்பிட்ட முறுக்கு பக்கோடா மாதிரியான சுவை எதிலுமே கிடைக்கிறது இல்லை.

-விளம்பரம்-

அந்த மாதிரி டெண்ட் கொட்டகைகளில் கிடைத்த பக்கோடா எப்படி சுவையா டேஸ்ட்டா செய்றோம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம். 80, 70, 60 களில் எல்லாம் இந்த டெண்ட் கொட்டாய் ரொம்பவே ஃபேமஸ்ஸா இருந்துச்சு காலப்போக்கில் டென்ட் கொட்டகைகள் எல்லாம் பெரிய திரையரங்குகளா மாற ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வரிசையில் நின்னு  சாண்ட்விச் வாங்கி சாப்பிடுற அளவுக்கு நம்மள மாத்திட்டாங்க. ஆனாலும் இன்னும் கிராமப்புறங்களில் சில ஏரியாக்கள்ல டென்ட் கொட்டாயில் இருந்திருந்தால் நல்லா இருக்கும் அப்படின்னு தோன்ற அளவுக்கு ரொம்பவே அற்புதமா இருக்கும்.

- Advertisement -

இன்னும் சில கிராமப்புறங்களில் திருவிழாக்களில் இரவு வெறும் திரை மட்டும் வச்சு தெருக்கல்ல படங்கள் போடுவது நடந்துகிட்டு தான் இருக்கு. டென்ட் கொட்டகைகளில் படம் பார்க்கிறது அப்படிங்கறது ஒரு தனி சுகம் தான். அந்த டென்ட் கொட்டகைகளில் படம் பாத்துட்டு இந்த மாதிரி இடைவேளை டைம்ல டென்ட் கொட்டகைகளில் விற்க்கப்படும்நொறுக்கு தீனிகளை வாங்கி சாப்பிடுவது ஒரு தனி டேஸ்ட்தான். சுவையான டென்ட் கொட்டாய் கிடைக்கிற ஸ்நாக்ஸ்கள்ல பக்கோடா எப்படி சுவையா செய்வது அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம் வாங்க.

Print
4 from 3 votes

டென்ட் கொட்டாய் பகோடா | Tent Kottai Pakoda In Tamil

டென்ட் கொட்டாய்அப்படின்னா இங்க நிறைய பேருக்கு தெரியாது இப்ப இருக்குற திரையரங்குகள் தான் அப்ப டென்ட்கொட்டாய் அப்படிங்கற பேர்ல இருந்துச்சு. எல்லா கீத்து கொட்டாயில தரையில் உட்கார்ந்துபடம் பார்பார்கள். அந்த மாதிரி டென்ட் கொட்டாய்கள்ல கிடைச்ச போண்டா மாதிரி சுவையானஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி கிடையாது. டென்ட் கொட்டகைகளில் படம் பார்க்கிறது அப்படிங்கறதுஒரு தனி சுகம் தான். சுவையான டென்ட்கொட்டாய் கிடைக்கிற ஸ்நாக்ஸ்கள்ல பக்கோடா எப்படி சுவையா செய்வது அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Tent Kottai Pakoda
Yield: 4
Calories: 98kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் பொட்டுக்கடலை
  • 14 கப் அரிசி மாவு
  • 14 கப் கடலைமாவு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பொட்டுக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
     
  • பிறகு ஒரு பாத்திரத்தில் பொடியாக அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலையை சேர்த்துக் கொள்ளவும். அதில் அரிசி மாவு, கடலை மாவு சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  •  நீளவாக்கில் பொடியாக நறுக்கிய வெங்காயம், சோம்பு,சீரகம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  •  பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக ஒன்றோடு ஒன்று கலக்குமாறுகலந்து விட வேண்டும்
  •  பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பகோடா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு நன்றாகசிவக்க பொரித்து எடுத்தால் சூடான சுவையான டென்ட் கொட்டாய் பக்கோடா தயார்.

செய்முறை குறிப்புகள்

இதை தேங்காய் சட்னி கொத்தமல்லி சட்னியோடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 98kcal | Carbohydrates: 42g | Protein: 6g | Fat: 3g | Saturated Fat: 1.6g | Sodium: 13mg | Potassium: 381mg | Fiber: 4g

இதையும் படியுங்கள் : ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!