தாளித்த பழைய சாதம் செய்வது எப்படி ?

- Advertisement -

இப்பொழுதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் தேவைக்கு அதிகமாக சாதம் சமைத்து விட்டு மீதி இருக்கும் சாதத்தை மறுநாள் வெளியே கொட்டி விடுகிறார்கள். அனைவரும் இப்படி செய்வதில்லை இன்னும் ஒரு சிலர் பழைய கால முறைப்படி மீத சாதத்தை வெளியே கொட்டி விடாமல் காலையில் சாப்பாடாகவும் அல்லது பொரிப்பதற்கு ஏற்றவாறு வடகமாகவும், நீச்சம் தண்ணிர் குடிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இப்படி மீதமாகும் சாதத்தை அதிகமான சத்துக்கள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா ? நாம் இப்படி அதிக சத்துக்கள் உள்ள சாதத்தை வீணாக்காமல் அந்த சாதத்தை தாளித்து அருமையாக சாப்பிடலாம். ஒருமுறை பழைய சாதத்தை தாளித்து சாப்பிட்டு பார்த்தால் நீங்களும் மறக்க மாட்டீர்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் மறுமுறை அதை செய்து தரச் சொல்வார்கள். தாளித்த பழைய சாதத்தை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-
Print
5 from 1 vote

தாளித்த பழைய சாதம் | Thalalitha Palaya Satham Recipe in Tamil

அக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
Active Time20 minutes
Total Time20 minutes
Course: Breakfast, காலைஉணவு
Cuisine: TAMIL, தமிழ்
Keyword: தாளித்த பழைய சாதம்
Yield: 3

Equipment

  • 1 கடாய்
  • 2 பவுள்

தேவையான பொருட்கள்

  • 100 ml எண்ணெய்
  • உப்பு                              தேவையான அளவு
  • ½ tbsp கடுகு                            
  • கருவேப்பிலை            சிறிது
  • 1 tbsp கடலை பருப்பு
  • 5 மோர் வத்தல்
  • 2 மிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்
  • கப் தயிர்
  • கொத்தமல்லி              சிறிது

செய்முறை

  • தாளித்த பழைய சாதம் தயார் பன்னுவதற்கு முதல் நீங்கள் மீதமான தண்ணீர் ஊற்றி வைத்திருக்கும் சாதத்தை இரண்டு பவுள் அளவிற்கு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு கடாயை அடுப்பில் வைத்து மூன்று டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய விடவும் என்னை காய்ந்தவுடன் ஐந்து மோர் வற்றலை உள்ளே போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் கடலை பருப்பு, கடுகு, கருவேப்பிலை, மிளகாய், போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு வெங்காயத்தை சேர்த்துக்கொண்டு வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன்.
  • நாம் பொித்து வைத்துள்ள மோர் வத்தல் 3 மற்றும் எடுத்து வைத்துள்ள பழைய சாதம் இவை இரண்டையும் கடாயில் போட்டு நன்றாக கிளரி விடவும்.
  • பழைய சாதம் சூடு ஏரியுடன் தேவையான அளவிற்கு தயிர் ஊற்றி நன்றாக கிளரி விடவும் தேவையான அளவிற்கு உப்பையும் சேர்த்துக் கொண்டு அடிப்பிடிக்காமல் இளம் தீயிலேயே வைத்து கிளரி விடவும்.
  • சாதம் குழையும் பதத்திற்கு வந்தவுடன் அப்படியே இறக்கிவிட்டு சிறிதாக கொத்தமல்லியை தூவி விடுங்கள் தாளித்த பழைய சாதம் தயார்.
  • மீதம் இருக்கும் மோர் வத்தலை கடித்துக் கொண்டு தாளித்த பழைய சாதத்தை சாப்பிட்டால் இதன் சுவைக்கு ஈடு இணை எங்கும் இல்லை.

Nutrition

Serving: 3person | Sodium: 303mg | Potassium: 840mg | Calcium: 850mg | Iron: 73.91mg
- Advertisement -

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here