இட்லி மாவு இருந்தா போதும் தித்திக்கும் சு வயில் தேன் மிட்டாய் இப்படி செய்யலாம்! குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!

- Advertisement -

தேன் மிட்டாய் தமிழ்நாட்டில் வளர்ந்த பலருக்கு சிறுவயதில் பிடித்த ஒரு சிற்றுண்டி ஆகும். ஒரு இனிப்பு சர்க்கரை பந்து உங்கள் வாயில் உடனடியாக உருகும்.அதன் ருசி ஒன்றோடு நிறுத்த முடியாது, பலவற்றை அடுத்து அடுத்து ருசித்து கொண்டே இருக்க தோன்றும்.

-விளம்பரம்-

 தேன் மிட்டாய் என்ற பெயரைக் கேட்டாலே நாவில் தேனின் சுவை ஊறுகிரம். 80 மற்றும் 90களில் மிகவும் பிரபலமாக இருந்த தேன்மிட்டாய் 2000 லிருந்து ஏதோ கிடைப்பதற்கு இல்லை! அதற்கு காரணம் தேன் மிட்டாய் நம் கண்களில் பார்ப்பதற்கே இப்போதெல்லாம் சிரமமாக போய்விட்டது.

- Advertisement -

வரைபடத்தில் மட்டுமே உலா வந்து கொண்டிருக்கும் தேன்மிட்டாய் ஒருகாலத்தில் பேட்டி கடைகளில் கிடைக்க கூடிய மிட்டாய்களின் ராஜாவாக இருந்தது. குழந்தைகளிடமிருந்து பெரியவர்கள் பறித்து தின்ற சம்பவங்கள் ஏராளமாக உங்களுக்கும் நடந்திருக்கலாம். 25 பைசா தேன்மிட்டாயை உடன்பிறந்த பிறப்பிடமே விட்டுக் கொடுக்காமல் மறைத்து சாப்பிட்டதெல்லாம் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு கப் இட்லி மாவு இருந்தாலே அதை வீட்டில் நாமே செய்து விடலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பாப்போம்.

Print
5 from 2 votes

தேன் மிட்டாய் | Thean Mittai Recipe In Tamil

தேன் மிட்டாய் தமிழ்நாட்டில் வளர்ந்த பலருக்கு சிறுவயதில் பிடித்த ஒரு சிற்றுண்டி ஆகும். ஒரு இனிப்புசர்க்கரை பந்து உங்கள் வாயில் உடனடியாக உருகும்.அதன் ருசி ஒன்றோடு நிறுத்த முடியாது,பலவற்றை அடுத்து அடுத்து ருசித்து கொண்டே இருக்க தோன்றும்.வரைபடத்தில் மட்டுமே உலா வந்து கொண்டிருக்கும் தேன்மிட்டாய்ஒருகாலத்தில் பேட்டி கடைகளில் கிடைக்க கூடிய மிட்டாய்களின் ராஜாவாக இருந்தது. ஒரு கப் இட்லி மாவு இருந்தாலே அதை வீட்டில் நாமே செய்து விடலாம். வாங்க இதை எப்படி செய்வது என்றுபாப்போம்.
Prep Time5 minutes
Active Time15 minutes
Course: sweets
Cuisine: tamil nadu
Keyword: Thean Mittai
Yield: 5
Calories: 135kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் புதியதாக அரைத்த இட்லி மாவு
  • 1/2 ஸ்பூன் கேசரி போடி
  • 1 சிட்டிகை பேக்கிங்சோடா
  • 200 கிராம் சர்க்கரை
  • 1/4 லிட்டர் எண்ணெய்

செய்முறை

  • புளிப்பில்லாத இட்லி மாவு எடுத்து கொள்ளுங்கள், அது நன்கு கெட்டியாக இருக்கவேண்டும். ஒரு கப் மாவைஎடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதில் கலருக்காக ஆரஞ்சு கலர் கேசரிக்கு சேர்க்கும் பொடி ஒரு சிட்டிகை, பேக்கிங் சோடா இந்த இரண்டையும்மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கிக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
     
  • இப்பொழுது அதற்கு தேவையான சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். அதனால் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சர்க்கரை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக பாகு காய்ச்சிக் கொள்ளுங்கள்.
  •  பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிசூடானதும், நாம் கலந்து வைத்திருக்கும் மாவை ஸ்பூன் வைத்து சிறிது சிறிதாக எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுத்து கொள்ளவேண்டும்.
  • எடுத்ததை ஆறவைத்து சர்க்கரை பாகில் போட்டு கிளறி எடுத்து சாப்பிட வேண்டும்..
  • தித்திப்பான தேன் மிட்டாய் ரெடி..!!

Nutrition

Serving: 200g | Calories: 135kcal | Carbohydrates: 52g | Protein: 2g | Fat: 4g | Sodium: 19mg | Potassium: 281mg | Sugar: 4g

இதையும் படியுங்கள் : 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த (25பைசா) கமர்கட்டு மிட்டாய் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! மிட்டாய்னா இதான்யா மிட்டாய்!