சிறுதானியங்கள் உங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நான் வெள்ளை சாதம் சாப்பிடுவதை விட சிறுதானியத்தில் சமைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளும் கிடைக்கும். ஆனால் நம்மால் அனைத்து சிறு தானியங்களையும் சமைத்த உண்ண முடியாது.
எனவே அந்த சிறுதானியங்களை வைத்து நாம் பலவிதமான உணவுகள் சமைத்து உண்ணலாம். தினை, வரகு ,சாமை, கேழ்வரகு, குதிரைவாலி என பல வகையான சிறுதானியங்கள் உண்டு. இந்த சிறுதானியங்களில் நாம் வெண்பொங்கல் பிரியாணி இட்லி தோசை என பல விதமான உணவுகளை உண்ணலாம். அதிலும் தினை மாவு நம் உடலுக்கு மிகவும் நல்லது இதில் பொதுவாக அதிரசம் செய்வார்கள்.
ஆனால் இன்று நாம் தினையை வைத்து திணை பொட்டுக்கடலை உருண்டை செய்யப் போகிறோம். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக இந்த திணை பொட்டுக்கடலை உருண்டையை கொடுக்கலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். முழுவதுமாக இயற்கையான பொருட்களை வைத்து இதை நாம் செய்வதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். வாங்க இந்த திணை பொட்டுக்கடலை உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தினை பொட்டுக்கடலை உருண்டை | Millet Balls Recipe In Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ தினை
- 100 கிராம் fried gram
- 100 கிராம் வெல்லம்
- 1 டேபிள் ஸ்பூன் தேன்
- 7 முந்திரி
- 7 திராட்சை
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- நெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- அதே கடாயில் மேலும் சிறிதளவு நெய் சேர்த்து திணை மாவை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக்கடலையும் நெய்யிலேயே வறுத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் வெள்ளத்தை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வரும் வரை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் தினை மாவு பொட்டுக்கடலை மாவு, முந்திரி திராட்சை வெள்ளை கரைசல்,ஏலக்காய் தூள் தேன் அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- இப்பொழுது அந்த கலவையில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து நன்றாக அழுத்தி உருட்டி கொள்ளவேண்டும்.
- இப்பொழுது ஆரோக்கியமான Millet ball தயார்.