ஹோலி பண்டிகை அன்று நாம் மறந்தும் கூட இந்த விஷயங்களை மட்டும் செய்துவீடாதீர்கள்!

- Advertisement -

பெருமாள் நரசிம்மர் அவதாரம் எடுப்பதற்கு முந்தைய நாளாக பங்குனி மாதத்தின் இறுதியில் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணரே ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்த நாளாக இந்த ஹோலி பண்டிகை கருதப்படுகிறது. ரதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க தீயில் எரிக்கப்பட்ட காமனை சிவபெருமான் மீண்டும் உயிர்த்தெழ செய்த நாளாகவும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

-விளம்பரம்-

வண்ணங்களின் திருவிழாவாக நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது தான் இந்த ஹோலி பண்டிகை. என்னதான் அனைத்து பகுதிகளிலும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டாலும் வட இந்தியாவில் ஹோலி பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். ரன்னியன் பிரகலாதனை கொள்வதற்காக அவனுடைய சகோதரி ஹோலிகாவை அனுப்பும்போது திருமாலுடைய அருளினால் ஹோலி கார்த்தியிலிருந்து சாம்பல் ஆனதையே நாம் ஹோலி பண்டிகையாக வருட வருடம் கொண்டாடுகிறோம். தீமைகளை அழித்து நல்லவர்களை காப்பதற்காக இறைவன் அவதரித்த நாளையே மக்கள் மகிழ்ச்சியோடு ஹோலி பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.

- Advertisement -

ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

மார்ச் 25 2024 அன்று கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்காக ஒரு வாரத்திற்கு முன்பாக இருந்தே மார்ச் 17 முதல் அனைத்து சடங்குகளும் தொடங்கி விடும். குட்டி ஹோலி அல்லது ஜோட்டி ஹோலி என்று அழைக்கப்படுகின்ற ஹோலிகா தகன் என்ற சடங்கு ஹோலி பண்டிகைக்கு முன்னாடி நாளே கொண்டாடப்படும்.

ஹோலிகா கொண்டாடப்படுவதற்கான நோக்கம்

ஹோலி பண்டிகைக்கு முந்தைய நாள் அன்று இரவு நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து தீ மூட்டி தீமைகள் அறிந்து நல்லவைகள் நடக்க வேண்டும் நிலைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வார்கள். அப்படி செய்யும்போது நம்மிடம் உள்ள எதிர்மறை ஆற்றல் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் அழிந்து நேர்மறை ஆற்றலும் நல்ல பழக்க வழக்கங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஹோலி பண்டிகை அன்று செய்ய வேண்டியவை

ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக குளித்து விட வேண்டும்.

-விளம்பரம்-

ஹோலிகா தகன் அன்று தீ மூட்டும்போது சுத்தமான இடத்தில் மட்டுமே தீ மூட்ட வேண்டும் தண்ணீரையும் பசுவின் கோமியத்தையும் கலந்து அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

ஹோலிகா தகன் செய்வதற்கு முன்பும் பின்பும் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.

இலைகள் மரக்கட்டைகள் பசும் சாணத்தால் ஆன வரட்டிகள் நல்லெண்ணெய் எள் காய்ந்த அட்சதை போன்றவைகளைக் கொண்டே தீ மூட்ட வேண்டும்.

-விளம்பரம்-

ஹோலிகா தகன் அன்று பூஜை செய்வதற்கு முன்பாகவும் பின்பாகவும் கைகளை சுத்தமாக கழுவி விட வேண்டும்.

மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவிடம் நன்றாக பிரார்த்தனை செய்த வேண்டிக் கொள்ள வேண்டும்.

அந்த நாளன்று பிறருக்கு தானம் வழங்குவது மிகவும் சிறப்பானது

ஹோலி பண்டிகை அன்று செய்யக்கூடாதவைகள்‌

ஹோலிகா தகன் அன்று தீ மூட்டும்போது அதில் பிளாஸ்டிக் குப்பை தேவையில்லாத பொருட்கள் வயர்கள் போன்றவற்றை போடக்கூடாது.

அனைவரிடமும் கோபப்படாமல் மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

தெருவில் கிடைக்கின்ற தேவை இல்லாத பொருட்களை மறந்தும் கூட தொட்டு விடக்கூடாது.

ஹோலிகா தகன் அன்று மற்றவர்களிடமிருந்து கடன் வாங்குவதையும் கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

ஹோலிகா தகன் அன்று பழங்கள் பால் தவிர மற்ற உணவு பொருட்களை உண்ணக்கூடாது.

இதனையும் படியுங்கள் : வெறும் 7 நாட்களில் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு வீட்டில் பணம் சேர நாம் செய்ய வேண்டியவை!