2024 புத்தாண்டு அன்று வீட்டில் இதை மட்டும் செய்து விடுங்கள் போதும் வீட்டில் செல்வ வளங்கள் பெருகி கொண்டே இருக்கும்!

- Advertisement -

2024 புத்தாண்டு திங்கள் கிழமை மார்கழி மாதம் 16ஆம் தேதி பிறக்கிறது.பிறக்கின்ற நேரத்தில் அந்த அந்த தினத்தன்று செய்ய வேண்டிய சில விஷயங்கள், விளக்கேற்றும் முறை,நம் வீட்டிற்கு வாங்க வேண்டிய பொருட்கள், நாம் உடுத்த வேண்டிய உடை, கடவுளை வழிபடும் முறை என அனைத்தையும் பற்றி பார்க்கலாம். இது அனைத்தையும் செய்வதன் மூலம் நம் வீட்டில் செல்வ வளம் பெருகி புத்தாண்டு நமக்கு ஒரு சிறந்த ஆண்டாக விளங்கும். வாருங்கள் இப்பொழுது புத்தாண்டு நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

-விளம்பரம்-

விளக்கேற்றும் முறை

மார்கழி 16ஆம் தேதி புத்தாண்டு பிறக்கிறது. பொதுவாக மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு சிறந்த மாதமாக கருதப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் நாம் வீட்டில் விளக்கு ஏற்றினால் நம் வீட்டிற்கு செல்வ வளம் பெருகும் என்பார்கள். அந்த வகையில் புத்தாண்டு பிறக்கின்ற அந்த நாள் என்று வீட்டின் வாசலில் மஞ்சள் தண்ணீர் தெளித்து கோலம் போட்டால் நம் வீட்டிற்கு மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4 மணியிலிருந்து ஆறு மணிக்குள் நிலை வாசலில் மஞ்சள் திரி போட்டு நெய் விளக்கு ஏற்ற வேண்டும். மேலும் நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் பூக்களால் அலங்காரம் செய்து கடவுளை வணங்க வேண்டும். அதோடு நம் வீட்டில் ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கு ஏற்றினால் குலம் தலைக்கும். எனது நிலை வாசலில் விளக்கேற்றுவதோடு குத்துவிளக்கம் ஏற்றி பூஜையறையில் வழிபாடு செய்யலாம் இப்படி நாம் செய்வதால் நம் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

- Advertisement -

புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய முக்கியமான ஒரு விஷயம்

பொதுவாக ஏலக்காயை மகாலட்சுமி கூறிய பொருள் என்பார்கள். எனவே புத்தாண்டு அன்று காலை 6 மணிக்கு நிலை வாசலுக்கு எலிகள் நின்று வீட்டை பார்த்தவாறு ஏலக்காய் தூளை வீட்டை நோக்கி தூவ வேண்டும். அன்று முழுவதும் அந்த ஏலக்காய் தூள் நிலை வாசலிலேயே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி அந்த ஏலக்காய் தோலை தூங்கும்போது மகாலட்சுமியே வருக வரலட்சுமி வருக என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள் அப்படி செய்தால் நம் வீட்டிற்கு மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும் மேலும் செல்வ செழிப்போடும் வாழலாம்.

நாம் அணிய வேண்டிய உடை

பொதுவாக திங்கள்கிழமை சந்திரனுக்கு உகந்த நாள் என்பார்கள். எனவே புத்தாண்டு திங்கள் கிழமை பிறப்பதால், சந்திரனுக்கு உரிய நிறமான வெள்ளை நிற ஆடையை நீங்கள் அணியலாம். அப்படி முழுவதுமாக வெள்ளை ஆடை அணிய விரும்பாதவர்கள் சந்தனம் கலந்த வெள்ளை நிற ஆடையை அணியலாம். புத்தாண்டு அன்று சந்திரனுக்கு உரிய நிறமான வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தால் மிகச் சிறப்பு.

புத்தாண்டு அன்று வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள்

புத்தாண்டு அன்று இந்த முக்கியமான மூன்று பொருட்களை வாங்குவதால் நம் வீட்டிற்கு செல்வ செழிப்பு உண்டாகும். அதில் முதலாவது ஆக துளசி இலைகள் இந்த துளசி இலைகளை வாங்கி பூஜை அறையில் உள்ள ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் போட்டு வழிபடலாம். மகாலட்சுமியின் அம்சமாக விளங்கக்கூடிய ஏலக்காய். புத்தாண்டு அன்று ஏலக்காயை வாங்கி வீட்டில் வைப்பது மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது. மூன்றாவது கல் உப்பு. இதுவும் மகாலட்சுமியின் அம்சமாக விளங்கக்கூடிய ஒரு பொருள்தான். இந்தக் கல் உப்பு நம் வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் நம் வீட்டிற்கு செல்வ செழிப்பு பன்மடங்கு பெருகும்.

-விளம்பரம்-

இந்த மூன்று பொருட்கள் மட்டும் இல்லாமல் தம் வீட்டிற்கு மல்லிகை பூ சர்க்கரை மஞ்சள் குங்குமம் இனிப்பான பலகாரங்கள் என இவைகள் எல்லாமும் வாங்கி வைப்பதால் புத்தாண்டு அன்று மிகச் சிறப்பானதாக இருக்கும்.வாங்கி வைத்த இந்த பொருட்களை எல்லாம் நம் வீட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.நம் வீட்டில் இப்பொழுது சொன்ன அனைத்து விஷயங்களும் செய்து முடித்துவிட்டு புத்தாண்டு அன்று கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்து வாருங்கள். உங்களுக்கு செல்வம் பன்மடங்கு பெருகும். வீட்டில் எந்த பிரச்சனையும் வராமல் புத்தாண்டு உங்களுக்கு நல்ல ஒரு ஆண்டாக செல்வத்தை வாரி வழங்கக் கூடிய ஒரு ஆண்டாக அமையும்.

இதனையும் படியுங்கள் : உங்கள் தங்க நகை இனி அடகுக்கே செல்ல கூடாதா ? வீட்டில் மேலும் தங்கம் சேர வேண்டுமா இதை மட்டும் செய்யுங்கள் போதும்!