உங்கள் தங்க நகை இனி அடகுக்கே செல்ல கூடாதா ? வீட்டில் மேலும் தங்கம் சேர வேண்டுமா இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

அனைவரோட வாழ்க்கையும் எளிதாக இருக்காது ஒரு சிலருக்கு வீட்டில் தங்க நகை வாங்குவது என்பது சர்வ சாதாரணமான செயலாக இருக்கும் ஏதாவது பண்டிகைகள் நிகழ்ச்சிகள் வந்துவிட்டால் ஒரு தங்க நகை வாங்கி விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் தங்களின் வாழ்வையே கஷ்டப்பட்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அவர்கள் சிறிது சிறிதாக சேர்த்த பணத்தை வைத்து தங்கம் நகைகள் வாங்குகிறார்கள். அப்படி கஷ்டப்பட்டு வாங்கிய தங்க நகை அடமானத்திற்கு செல்லும் போது அதன் வலி வேதனை என்னவென்று ஒருபோதும் எவராலும் விவரிக்க முடியாது. அந்த அளவிற்கு ஆனா வலி அவர்களுக்கு இருக்கும்.

-விளம்பரம்-

தீடீர் பண தேவை

அப்படி அவர்கள் தங்க நகையை அடமானம் வைப்பதும் ஏதாவது வீண் செலவுகளுக்காக கூட இருக்காது. அவர்களை எதிர்பாக்காத வண்ணம் வீட்டில் திடீரென யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கும் இல்லையென்றால் ஏதாவது மிகப்பெரிய செலவு ஒன்று வந்திருக்கும். அப்படிப்பட்ட நிலையில் தான் பண தேவைக்காக நகையை அடகு வைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதை தவிர அவர்கள் இடம் முதலீடு என்று எதுவுமே இருக்காது இப்படி அடகுக்கு சென்ற நகையை மீட்பதற்காகவும் இனிமேல் உங்களது அழகுக்கு செல்லாமல் இருப்பதற்காகவும் சொல்லப்பட்ட பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் காண உள்ளோம்.

- Advertisement -

அலட்சியம்

நாம் கஷ்டப்பட்டு வாங்கிய தங்கை நகையை நாம் எப்படி பத்திரமாக பாதுகாக்கிறோம் என்பதற்கும் சில விதிமுறைகள் இருக்கின்றது. நாம் வீட்டில் நகைகளை கண்ட இடத்தில் போட்டு வைத்திருக்க கூடாது. தங்க நகையை கழட்டும் போது கழட்டி இடத்திலேயே மறுந்தும் கூட வைக்க கூடாது. இப்படி நீங்கள் தங்க நகையை கையாளுவதில் அலட்சியம் காட்டுது தங்கத்தின் மீது அலட்சியம் காட்டியதற்கு சமம். அப்படி நாம் அலட்சியம் காட்டும்போது நம்மிடம் இருக்கும் தங்கம் நம்மிடத்தில் நிலையாக தாங்கால் நம்மை விட்டு விலகி செல்லும்.

மகா லட்சுமி

முதலில் நீங்கள் அடமானத்திற்கு வைத்த தங்க நகைகளை திருப்பும் போது அதற்காக நீங்கள் செலுத்தும் பணத்தை உங்களின் இரு கைகளால் கொடுக்க வேண்டும். நீங்கள் சாதாரணமாக ஒரு கையால் பணம் கொடுக்கக் கூடாது. அதேபோல் நகையை திருப்பும் போது அவர்கள் தங்க நகைகளை கொடுக்கும்போது அதை இரண்டு கைகளால் வாங்க வேண்டும் ஏனென்றால் ஸ்வர்ணம் என்பது மகாலட்சிமியின் அம்சமாக விளங்க கூடிய ஒன்று. அப்படி மகாலட்சுமியே நம் வீட்டிற்கு அழைக்கும் போது பயபக்தியோடு செயல்பட வேண்டும். இப்படி செய்யும் போது அந்த தங்கம் நம் வீட்டில் தங்க விருப்பப்படும்.

வாங்கி அணியக்கூடாது

அப்படியே நீங்கள் அடமானத்திலிருந்து திருப்பி வந்த தங்க நகை வாங்கி வந்தவுடன் நேரடியாக அணிந்து கொள்ளக் கூடாது. ஒரு பாத்திரத்தில் மஞ்சள் கலந்த தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் அந்த தங்க நகையை நன்கு அலசி கொண்டு சென்று உங்கள் பூஜை அறையில் இருக்கும் ஏதாவது ஒரு சாமி படத்திற்கு சிறிது நேரம் அணிவித்து விடுங்கள். அதன் பிறகு அந்த தங்க நகைகளை நீங்கள் அணிந்து கொள்ளலாம் இல்லை நீங்கள் பீரோவில் பத்திரப்படுத்த போகிறீர்கள் என்றால் நீங்கள் தங்க நகை வைக்கும் இடம் வாசனை நிறைந்து காணப்பட வேண்டும். அதற்காக அங்கு ஜவ்வாது, ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்ற வாசனை நிறைந்த பொருட்கள வைத்து கொள்ளுங்கள். இதுபோன்ற செய்யும்போது நகை மீண்டும் அடகுக்கு செல்லாது

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here