- Advertisement -
திருக்கை மீன் பூண்டு குழம்புதிருக்கை மீன் குழம்புக்கு அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது திருக்கை மீன் பூண்டு குழம்பு ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும் உதிர்வை கட்டுப்படுத்தவும், இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : காரசாரமான வஞ்சரம் மீன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்! வேண்டாம்னு யாருமே சொல்ல மாட்டாங்க!
- Advertisement -
இந்தக் குழம்பு நல்ல மருத்துவ குணம் நிறைந்த குழம்பாக இருக்கும். அதே சமயம் காய்ச்சல் வந்து காய்ச்சல் வந்து விட்டதும் சாப்பிட எதுவுமே பிடிக்காது. அந்த சமயத்தில் சுட சுட சாதத்தோடு இந்த குழம்பு போட்டு பிசைந்து கொடுத்தால் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள். வாங்க அந்த சூப்பரான மருத்துவக் குழம்பை நாமும் தெரிந்து கொள்வோம்.
திருக்கை மீன் பூண்டு குழம்பு | Thirukkai Fish Poondu Kulambu Recipe In Tamil
திருக்கை மீன் குழம்புக்கு அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது திருக்கை மீன் பூண்டு குழம்பு ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும் உதிர்வை கட்டுப்படுத்தவும், இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், இந்தக் குழம்பு நல்ல மருத்துவ குணம் நிறைந்த குழம்பாக இருக்கும். அதே சமயம் காய்ச்சல் வந்து காய்ச்சல் வந்து விட்டதும் சாப்பிட எதுவுமே பிடிக்காது. அந்த சமயத்தில் சுட சுட சாதத்தோடு இந்த குழம்பு போட்டு பிசைந்து கொடுத்தால் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள்.
Yield: 5 People
Calories: 217kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/2 Kg திருக்கை மீன்
- 15 சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 20 பூண்டு
- 2 tsp எலுமிச்சை சாறு
- 5 tsp தேங்காய் எண்ணெய்
- 1 tsp வெந்தயம்
- 1/2 tsp மஞ்சள் தூள்
- கருவேப்பிலை தேவையான அளவு
அரைத்து வைக்க
- 5 tsp மிளகு
- 4 tsp மல்லித்தூள்
- 5 tsp தேங்காய் துருவல்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- மிளகு,மல்லித்தூள்,தேங்காய் போன்ற அரைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- இதை புளிக்கரைசலுடன் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், நறுக்கிய சின்ன வெங்காயம், உரித்த பூண்டு, போட்டு வதக்கவும்.
- பின் வெவங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்கி வந்தவுடன் அதில் நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி மென்மையாக வதங்கி வந்தவுடன்.
- அத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நன்கு கொதி வந்தவுடன் கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
- அதன் பின் குழம்பு நன்கு கொதித்து வந்ததும் எலுமிச்சை பழ சாறு சேர்த்து, இறக்கிப் பரிமாறவும். அவ்வளவு தான் திருக்கை மீன் பூண்டு குழம்பு தயார்.
Nutrition
Serving: 600g | Calories: 217kcal | Carbohydrates: 12g | Protein: 37.2g | Fat: 2.8g | Cholesterol: 83mg | Sodium: 3619mg