காரசாரமான வஞ்சரம் மீன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்! வேண்டாம்னு யாருமே சொல்ல மாட்டாங்க!

- Advertisement -

நீங்க உங்க வீட்ல அடிக்கடி மீன் வறுவல் செய்றவுங்களா. அப்போ இந்த பதிவு முக்கியமா உங்களுக்கு தான். வஞ்சரம் மீன் வறுவல், குழம்புன்னு நாம செய்வோம். ஆனால் ஒரே மாதிரி செய்வதற்கு பதிலாக நீங்க இப்படி ஒரு தரம் செய்து பாருங்க. சுவையும் மிக அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான வஞ்சரம் மீன் சுக்கா செய்வது எப்படி ?

- Advertisement -

வீட்டில் இருப்பவர்கள் இனி அடிக்கடி இந்த வஞ்சரம் மீன் வறுவளை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இந்த வஞ்சர மீன் வறுவலை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செயல்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம்.

Print
No ratings yet

வஞ்சரம் மீன் வறுவல் | Vanjaram Fish Fry Recipe in Tamil

நீங்க உங்க வீட்ல அடிக்கடி மீன் வறுவல் செய்றவுங்களா. அப்போ இந்த பதிவு முக்கியமா உங்களுக்கு தான். வஞ்சரம் மீன் வறுவல், குழம்புன்னு நாம செய்வோம். ஆனால் ஒரே மாதிரி செய்வதற்கு பதிலாக நீங்க இப்படி ஒரு தரம் செய்து பாருங்க. சுவையும் மிக அருமையாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் இனி அடிக்கடி இந்த வஞ்சரம் மீன் வறுவளை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த மீன் வறுவளை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செயல்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம்.
Prep Time20 minutes
Active Time10 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Fish, மீன்
Yield: 4 People
Calories: 108kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 15 சின்ன வெங்காயம்
  • 2 இன்ச் இஞ்சு
  • 6 பல் பூண்டு
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • மல்லி இலை தேவையான அளவு
  • 2 tsp மிளகாய் தூள்
  • 2 tsp தனியா தூள்
  • 2 tsp சீராக தூள்
  • 2 tsp கரம் மசாலா தூள்
  • 1 tsp மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 tsp அரிசி மாவு
  • 1/2 எலுமிச்சை
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 tsp கலர் பவுடர்
  • வஞ்சரம் மீன் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சின்ன வெங்காயம், இஞ்சு, பூண்டு, கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து அரைத்து கொள்ளவும். அதோடு மிளகாய் தூள், தனியா தூள், சீராக தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு, எலுமிச்சை, எண்ணெய் சேர்த்து கலந்து கடைசியில் கலர் பொடி சேர்த்து கலந்து எடுத்து கொள்ளவும்.
  • வஞ்சரம் மீனை வெட்டி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். கலந்து வைத்திருந்த மசாலாவை தடவி ஒரு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
  • தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய மீனை அப்படியே எண்ணையில் மிதக்க விட்டு எடுத்தால் சுவையின் அளவு தட்டி தூக்கிரும் பாருங்க. செய்து பாத்துட்டு சொல்லுங்க நண்பர்களே..!

Nutrition

Serving: 500g | Calories: 108kcal | Protein: 20.3g | Fat: 2.56g | Cholesterol: 53mg | Vitamin C: 1.6mg | Calcium: 40mg | Iron: 2.28mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here