- Advertisement -
நீங்கள் வீட்டில் மாலை நேரம் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் மற்றும் வடைகளை செய்வதற்கு பதிலாக நீங்கள் டீக்கடைகளில் எப்போதும் விரும்பி சாப்பிடும் வாழைப்பூ வடையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுங்கள் யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சரவணா பவன் ஸ்பெஷல் சாம்பார் வடை இப்படி செஞ்சி பாருங்க!
- Advertisement -
அந்த அளவிற்கு இந்த வாழைப்பூ வடை அட்டகாசமான ருசியில் இருக்கும் அடுத்த முறையும் இதை செய்ய சொல்லி உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த டீக்கடை வாழைப்பூ வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
வாழைப்பூ வடை | Vazhaipoo Vada Recipe In Tamil
நீங்கள் வீட்டில் மாலை நேரம் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் மற்றும் வடைகளை செய்வதற்கு பதிலாக நீங்கள் டீக்கடைகளில் எப்போதும் விரும்பி சாப்பிடும் வாழைப்பூ வடையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுங்கள் யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் கடலை பருப்பு
- 2 வாழைப்பூ
- 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 3 பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது
- 2 டீஸ்பூன் சோம்பு
- கருவேப்பிலை கொஞ்சம்
- 5 பல் பூண்டு தட்டியது
- உப்பு தேவையான அளவு
- பெருங்காய பொடி தேவையான அளவு
- எண்ணெய் பொரிப்பதற்கு தேவையானவை
செய்முறை
- முதலில் நாம் வைத்திருக்கும் கடலை பருப்பை 1 மணி நேரம் நன்கு ஊறவைத்து அதனை சற்று கொர கொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.
- பிறகு வாழைப்பூ கொண்டை பகுதியை மட்டும் தவிர்த்து மீதியுள்ளதை நன்கு அறிந்துகொள்ளவும்.
- பிறகு அரைத்த கடலை மாவில் இவற்றை சேர்த்து அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, கருவேப்பிலை, பூண்டு, பெருங்காய பொடி சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
- பின் பருப்பு வடை பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தீயை மிதமாக ஏறிய விட்டு.
- பின் நாம் பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுட சுட வாழைப்பூ வடை தயார்.