வல்லாரை கீரையை வைத்து கமகமனூ ருசியான IQ தோசை ஒரு முறை இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

இன்னிக்கு அருமையான ஐ க்யூ தோசை பண்ண போறோம். அது என்ன IQ தோசை அப்படின்னு கேட்டீங்கன்னா. அது ஒன்னும் இல்லங்க நம்மளோட ஞாபக சக்தி அதிகரிக்க கூடிய முக்கியமான ஒரு பொருளை வைத்து பண்ண போறோம். அப்படி அது என்ன பொருள் அப்படின்னு யோசிச்சீங்கன்னா அது ஒரு கீரை அது என்ன கீரை அதுதான் வல்லாரை கீரை.

-விளம்பரம்-

இந்த வல்லாரைக் கீரையை வைத்து ஒரு தோசை சூப்பரா செய்து குழந்தைகளுக்கு கொடுக்க போறோம். அந்த தோசை எல்லாருமே சாப்பிடலாம் ஞாபக சக்தி பிரச்சனை இருக்கிறவங்க எல்லாருமே இந்த IQ தோசையை சூப்பரா செய்து சாப்பிடலாம். அது மட்டும் இல்லாம இந்த வல்லாரைக் கீரையை கூட்டு, பொரியல், குழம்பு இந்த மாதிரி வச்சு கொடுக்கும்போது குழந்தைகள் சாப்பிடுவதற்கு ரொம்பவே அடம்பிடிப்பாங்க.

- Advertisement -

அப்படி அடம்பிடிக்கிறவங்களுக்காக தான் நம்ம இந்த தோசை மாவில் வல்லாரைக்கீரை சேர்த்து செஞ்சு கொடுக்கப் போறோம். குழந்தைகளை இங்க பாருங்க பச்சை கலர் தோசை அப்படின்னு சொல்லி ஏமாத்த போறோம். இப்படி கலர் கலரா தோசை சுட்டுக்கொடுத்து குழந்தைகளை சாப்பிட வைத்து அவங்களை ஆரோக்கியமாக ஆக்க போறோம். அது மட்டும் இல்லை ஞாபக சக்தியும் புத்தி கூர்மையும் அதிகமாக்க போறோம்.

அதுக்கு தான் இந்த வல்லாரை கீரையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு தோசை செய்து கொடுத்தோம்னா அவங்க கலரை பார்த்துட்டு தோசைல என்ன சேர்த்து செய்து  இருக்கோம்னு கேட்க மாட்டாங்க அப்படியே சாப்பிடுவாங்க. நம்ம என்ன பண்ண போறோம் இப்போ இந்த வல்லாரை கீரையை வச்சு அருமையான தோசை குழந்தைகளுக்கு IQ அளவை அதிகம் பண்றதுக்காக செய்து கொடுக்கப் போறோம். சரி வாங்க என்ன IQ தோசை எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்

-விளம்பரம்-
Print
No ratings yet

வல்லாரை IQ தோசை | Vallarai IQ Dosa Recipe In Tamil

வல்லாரைக் கீரையை வைத்து ஒரு தோசை சூப்பரா செய்து குழந்தைகளுக்கு கொடுக்க போறோம். அந்த தோசை எல்லாருமே சாப்பிடலாம் ஞாபக சக்தி பிரச்சனை இருக்கிறவங்க எல்லாருமே இந்த IQ தோசையை சூப்பரா செய்து சாப்பிடலாம். அது மட்டும் இல்லாம இந்த வல்லாரைக் கீரையை கூட்டு, பொரியல், குழம்பு இந்த மாதிரி வச்சு கொடுக்கும்போது குழந்தைகள் சாப்பிடுவதற்கு ரொம்பவே அடம்பிடிப்பாங்க. இந்த வல்லாரை கீரையை வச்சு அருமையான தோசை குழந்தைகளுக்கு IQ அளவை அதிகம் பண்றதுக்காக செய்து கொடுக்கப் போறோம்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Vallarai Keerai Dosa
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் தோசை மாவு
  • 1 கைப்பிடி வல்லாரை கீரை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 2 பச்சைமிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வல்லாரைக் கீரையை பொரியலுக்கு, குழம்பிற்கு செய்யும்பொழுது வெறும் இலைகளை மட்டும் பயன்படுத்துவோம். ஆனால் தோசையின் பொழுது அடியில் உள்ள தண்டை சிறிதளவு மட்டும் நறுக்கிவிட்டு அப்படியே அலசி கழுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பிறகு கொத்தமல்லி இலைகளையும் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் , பூண்டு,  இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதே மிக்ஸி ஜாரில் வல்லாரைக் கீரை , கொத்தமல்லி சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு எடுத்து வைத்துள்ள தோசை மாவில் அரைத்து வைத்துள்ள வல்லாரைக் கீரை விழுதை சேர்த்து நன்றாக கலந்து விடவும் .தேவை என்றால் உப்பு சேர்த்து கலக்கவும்.
  • பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து கலந்து வைத்துள்ள வல்லாரை தோசை மாவு எடுத்து தோசைகளாக வார்த்தெடுத்தால் ருசியான  IQ தோசைதயார்.
  •  இந்த தோசை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த தோசையை காரச் சட்னி தேங்காய் சட்னி சேர்த்து  பரிமாறலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg