அடுத்தமுறை வஞ்சரம் மீன் வாங்கினால் இப்படி ஒரு தரம் ருசியான பொடிமாஸ் பண்ணி பாருங்கள்!

- Advertisement -

மீன் உணவுகள் அப்படி சொன்னால்  எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இதுவரைக்கும் மீன் குழம்பு , மீன் வறுவல் அப்படின்னு சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிச்சு போனவர்களுக்காக  புதுசா இப்ப நம்ம பண்ண போறது வஞ்சரம் மீன் பொடிமாஸ். இந்த வஞ்சரம் மீன் பொடிமாஸ் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.  பொடிமாஸ் அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருவது முட்டை பொடிமாஸ் மட்டும் தான். ஆனால் இப்போ நம்ம முட்டை பொடிமாஸ் மட்டும் இல்லாம சில கிழங்குகளையும் காய்கறிகளையும் கூட பொடிமாஸ் செய்து சாப்பிட்டு இருப்போம்.

-விளம்பரம்-

ஆனால் இன்னைக்கு நம்ம சூப்பரான சுவையான வஞ்சரம் மீனை வச்சு ஒரு பொடிமாஸ் பண்ணி சாப்பிட இருக்கோம். இந்த வஞ்சரம் மீன் பொடிமாஸ் ரொம்பவே சுலபமா வீட்ல ரொம்ப ரொம்ப ஈஸியாவே பண்ணலாம். வஞ்சரம் மீன் பொடிமாஸ் செய்து சாப்பிட்டு பாருங்க ரொம்பவே அருமையான சுவையில இருக்கும். இந்த வஞ்சரம் மீன் பொடிமாஸ் நாம்  சாப்பாட்டுக்கு சேர்த்தும் சாப்பிடலாம் இல்ல அதை ஸ்னாக்ஸ் மாதிரி அப்படியே கூட சாப்பிட்டுக்கலாம். இந்த வஞ்சரம் மீன் பொடிமாஸ் சுவை ரொம்ப அருமையா இருக்கும்.

- Advertisement -

இந்த மாதிரி பொடிமாஸ் செய்து சாப்பிடும்போது இன்னும் நல்ல டேஸ்டாக இருக்கும். இந்த வஞ்சரம் மீன் பொடிமாஸ் சீக்கிரமா ரொம்பவே சுலபமா செய்து முடித்துவிடலாம். இந்த வஞ்சரம் மீன் பொடிமாஸ் செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படாது ரொம்பவே கம்மியான பொருட்களை வைத்து ரொம்ப சுவையான இந்த வஞ்சரம் மீன் பொடிமாஸ் எப்படி சுலபமா தயாரிக்கிறது அப்படிங்கிறதை பார்க்க இருக்கிறோம். அதனால இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லாருமே சாப்பிடலாம். இந்த மாதிரி வஞ்சரம் மீனில் முள்ளு இல்லாததால அதில் பொடிமாஸ் செய்து கொடுக்கும் பொழுது அவங்களும் விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. வாங்க இந்த வஞ்சரம் மீன் பொடிமாஸ் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

வஞ்சரம் மீன் பொடிமாஸ் | Vanjaram Fish Podimas In Tamil

வஞ்சரம் மீன் பொடிமாஸ் சீக்கிரமா ரொம்பவே சுலபமா செய்து முடித்துவிடலாம். இந்த வஞ்சரம் மீன் பொடிமாஸ்செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படாது ரொம்பவே கம்மியான பொருட்களை வைத்து ரொம்ப சுவையானஇந்த வஞ்சரம் மீன் பொடிமாஸ் எப்படி சுலபமா தயாரிக்கிறது அப்படிங்கிறதை பார்க்க இருக்கிறோம்.அதனால இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் எல்லாருமே சாப்பிடலாம். இந்த மாதிரி வஞ்சரம்மீனில் முள்ளு இல்லாததால அதில் பொடிமாஸ் செய்து கொடுக்கும் பொழுது அவங்களும் விருப்பப்பட்டுசாப்பிடுவாங்க. வாங்க இந்த வஞ்சரம் மீன் பொடிமாஸ் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Vanjaram Fish Podimas
Yield: 4
Calories: 160kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 வஞ்சரம் மீன்
  • 2 வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 2 பச்சைமிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 எலுமிச்சை பழம்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வஞ்சரம் மீனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். வஞ்சரம் மீனில் மஞ்சள் தூள், மிளகாய்தூள்,எலுமிச்சை பழம் சிதறிதளவு உப்பு சேர்த்து நன்றாக ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • மீன்கள் 15 நிமிடம் ஊறிய பிறகு மீனை அடுப்பில் ஒரு கடாயை வைத்து  எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு பொரித்து வைத்துள்ள வஞ்சரம் மீனை கையால் உதிர்ந்து எடுத்துகொள்ள வேண்டும். பின்பு அடுப்பில்ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள்,பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
  • பிறகு அதில் உதிர்த்து வைத்துள்ள வஞ்சரம் மீனின் சதைப்பகுதிகளை சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் . வஞ்சரம் மீனின் சதை பகுதிகள் நன்றாக பொடிமாஸ்போல் கலந்து வந்த பிறகு அவற்றின் மேல் எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிட வேண்டும்.
  • நன்றாக கலந்து பின் சூடாக எடுத்து பரிமாறினால் சுவையான வஞ்சரம் மீன் பொடிமாஸ் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Protein: 12g | Sodium: 21mg | Potassium: 550mg | Iron: 0.3mg

இதையும் படியுங்கள் : பழைய சாதம், சுடு சாதத்துடன் சாப்பிட ருசியான நெத்திலி கருவாடு தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!