லட்ச கணக்கில் உள்ள கடன் கூட தீர ஆடி மாதம் வளர்பிறையில் வாராகி அம்மனை நினைத்து இந்த தீபத்தை ஏற்றுங்கள்!
இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விலங்குபவள் வாராகி. கேட்டவருக்கு கேட்ட வரத்தை அப்படியே அள்ளித் தருபவள் அவள். கன்னிமார்களுள் ஐந்தாவதாக விளங்குபவள் தான் இந்த வாராஹி, அதனால் தான் இந்த தாயாருக்கு பஞ்சமி திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சக்தி வாய்ந்த வாராகி அம்மனை நாம் வழிபட
இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விலங்குபவள் வாராகி. கேட்டவருக்கு கேட்ட வரத்தை அப்படியே அள்ளித் தருபவள் அவள். கன்னிமார்களுள் ஐந்தாவதாக விளங்குபவள் தான் இந்த வாராஹி, அதனால் தான் இந்த தாயாருக்கு பஞ்சமி திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சக்தி வாய்ந்த வாராகி அம்மனை நாம் வழிபடுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
அது மட்டும் இன்றி நம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் தீய சக்திகளின் தொல்லையில் இருந்தும் நம்மை காக்கும் தாயாக இந்த வாராகி துணை நிற்பார். இத்தகைய பெருமை வாய்ந்த இந்த அன்னையை நாம் எப்படி வழிபட்டால் நம்முடைய துன்பங்களிலிருந்து எளிமையாக வெளி வரலாம் என்பன பற்றிய தகவலை தான் ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
கடன் தீர வாராகி அன்னைக்கு ஏற்ற வேண்டிய தீபம்
இந்த தீப வழிபாட்டை நாம் கோவிலுக்கு சென்று தான் செய்ய வேண்டும் என்பது இல்லை, நமது வீட்டிலேயே செய்யலாம். மாலை ஏழு மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஏனென்றால் வராகி அம்மன் வழிபாடு என்பது அந்தி சாய்ந்த பின் செய்தால் தான் விசேஷமாக இருக்கும்.
இதற்கு வாராகி அம்மன் சிலை படம் வைத்து வழிபடுபவர்கள் அவற்றை துடைத்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து மலர் சாற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். வாராகி அம்மன் படம் இல்லாதவர்கள் அவர்களை மனதால் நினைத்துக் கொண்டு அவர்களுக்கு என தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்தையே வாராகி அம்மன் ஆக மனதில் பாவித்து கொண்டும் வணங்கலாம்.
வெண்கடுகு தீபம்
இந்த வாராகி அம்மன் புகைப்படத்திற்கு முன்னர் ஒரு சிறிய மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிய நீல கலர் துணி மூட்டையில் வெண்கடுகை முடிந்து பொட்டணமாக மாற்றி, விளக்கினுள் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். இப்படி செய்யும் வேலையில் உங்கள் வீட்டின் நான்கு மூலைகளிலும் சிறிது வெண்கடுகை தூவி விடுங்கள்.
இப்படி தீபம் ஏற்றுவதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், கெட்ட அதிர்வலைகள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு பணவரவை தாராளமாக ஏற்படுத்திக் கொடுக்கும். இதன் மூலம் உங்களுடைய கடனை அடைப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு பலமடங்கு பெருகும். அது மட்டுமின்றி குடும்பத்தில் இருக்கும் மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் மனக்குழப்பம் பிரச்சனை இவற்றுக்கெல்லாம் இந்த வழிபாடு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து வாராகி அம்மனை மனதார வழிபட்டு வந்தால், உங்கள் வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வை வாழலாம்.