Advertisement
ஸ்வீட்ஸ்

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

Advertisement

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த கேரட் கீர் ரெசிபி உங்களுக்கு தான்! கீர் ரெசிபி வட இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். இது பாயாசம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கேரட் கீர் ரெசிபி அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான கேரட் கீர் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவங்களுக்கும் மிகவும் பொருத்தமானது. கேரட் கீர் கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத்தான கீர் ஆகும். கீர் ரெசிபிகள் பல இந்தியர்களுக்கு பிடித்த சமையல் என்பதால், கேரட் கீர் அனைவருக்கும் பிடித்த ரெசிபியாக உள்ளது. எப்பொழுதும் டீ காபி பால் கூல் ட்ரிங்ஸ் ஜூஸ் என ஒரே மாதிரியாக குடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடிய இந்த கேரட் கீர்ரை நாம் செய்து குடிக்கலாம்.

Advertisement

இந்த சுவையான ரெசிபி வீட்டில் நடைபெறும் பல்வேறு விசேஷங்களுக்கு தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் A உள்ளதால் இது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த சுவையான கேரட் கீர் ரெசிபியை வீட்டில் முயற்சி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்கவும். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு பாதாம் கீர் கொடுத்தால், அவர்களின் பசி அடங்குவதோடு, உடலுக்கு சத்தானதும் கூட. இனி இந்த கேரட் கீர் கடைகளில் சென்று வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை. இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும்.

கேரட் கீர் | Carrot Kheer Recipe In Tamil

Print Recipe
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த கேரட் கீர் ரெசிபி உங்களுக்கு தான்! கீர் ரெசிபி வட இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர். இது பாயாசம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கேரட் கீர் ரெசிபி அதிக பால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான கேரட்
Advertisement
கீர் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும். இது அனைத்து பருவங்களுக்கும் மிகவும் பொருத்தமானது. கேரட் கீர் கொஞ்சம் இனிமையானதாக இருப்பினும், ஒரு சத்தான கீர் ஆகும். இந்த சுவையான கேரட் கீர் ரெசிபியை வீட்டில் முயற்சி செய்து உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்கவும். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு பாதாம் கீர் கொடுத்தால், அவர்களின் பசி அடங்குவதோடு, உடலுக்கு சத்தானதும் கூட. இனி இந்த கேரட் கீர் கடைகளில் சென்று வாங்கி சாப்பிட
Advertisement
வேண்டிய அவசியமே இல்லை. இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம்.
Course sweets
Cuisine Indian
Keyword Carrot Kheer
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 3 People
Calories 150

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்
  • 1 பவுள்

Ingredients

  • 4 கேரட்
  • 1 லி பால்
  • 10 பாதாம்
  • 10 முந்திரி
  • 4 ஏலக்காய்
  • 2 டீஸ்பூன் நெய்
  • 10 திராட்சை              

Instructions

  • முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் உற்றி பால் பாதியளவு வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
  • பின்‌ ஒரு குக்கரில் கேரட், பாதாம், முந்திரி, நெய், ஏலக்காய் சேர்த்து இவை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரண்டு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வேக வைத்த கேரட், முந்திரி, பாதாம் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ச்சிய பாலை சேர்த்து அதனுடன் சர்க்கரை, அரைத்த கேரட் விழுது சேர்த்து நன்கு கலந்து ஒரு‌ கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும்.‌ விருப்பப்பட்டால் குங்குமப்பூ சேர்த்து கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான கேரட் கீர் தயார். இதை சூடாகவும், பிரிட்ஜில் குளிர வைத்தும் சாப்பிடலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 150kcal | Carbohydrates: 6g | Protein: 4.5g | Fat: 2.24g | Sodium: 69mg | Potassium: 320mg | Fiber: 1.5g | Sugar: 4.7g | Vitamin A: 85IU | Vitamin C: 5.9mg | Calcium: 69mg | Iron: 4.3mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

6 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

8 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

18 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago