Advertisement
ஸ்நாக்ஸ்

புரட்டாசி மாதத்தில் சிக்கன் சாப்பிட ஏங்கியவர்களுக்கு வெஜ் லாலிபாப் இப்படி செஞ்சி பாருங்க ஒன்னுக்கூட மிஞ்சாது!

Advertisement

புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதிலிருந்து அசைவ உணவு சாப்பிட முடியாமல் தவித்த எல்லாரும் இப்போ வெஜிடேரியனில் அசைவ உணவு மாதிரியான உணவுகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சிக்கன் மேல அதிக ஈடுபாடு இருக்கிறவங்களுக்கு சிக்கன் லெக் பீஸ் சாப்பிட முடியல அப்படின்னு வருத்தம் இருக்கா அப்போ இது உங்களுக்கு தான். சைவத்தில் சிக்கன் லெக் பீஸ் மாதிரியே வெஜிடபிள் லாலிபாப்பா மாற்றி கொடுத்து அசத்து போறோம். இந்த வெஜிடபிள்ஸ் லாலிபாப் ஆரோக்கியமானதாக  இருக்கும்.

சிக்கன் கால் எப்படி இருக்குமோ அதே போல் இந்த வெஜிடபிள் லாலிபாப்புக்கும் சிக்கன் லாலி பப்புக்கு எந்த ஒரு வித்தியாசமும் பாக்க முடியாத அளவுக்கு தத்து ரூபா ரூபமா செஞ்சு நம்ம கொடுக்கப் போறோம். சிக்கன் பிரியர்களுக்கு இது என்னடா புரட்டாசி மாதத்தில் நம்ம வீட்ல சிக்கன் செஞ்சு கொடுத்திருக்காங்க குழப்பம் அடைந்து அப்புறம் சாப்பிட்டு  இது சிக்கன் லாலிபாப் விட ரொம்பவே அருமையாக இருக்கிறது அப்படின்னு சொல்லி இன்னும் கேட்ட கேட்டு வாங்கி சாப்பிடுற அளவுக்கு எந்த சிக்கன் லாலிபாப் நம்ம செய்ய போறோம். அது வெஜிடேரியன்ல செய்ய போறோம்.

Advertisement

இப்போ எல்லா அசைவ உணவிற்கும் மாற்று சைவ உணவுகள் வந்திருச்சு. மட்டனுக்கு பதிலா பலாக்காய் யூஸ் பண்றது போல.  எதுவாக இருந்தாலும் சுவை அப்டிகிறது சத்து அப்படிங்கறது வேறுபடும். அந்த மாதிரி நாம வெஜிடேரியன்ல நிறைய நான்வெஜ் ஐட்டம்ஸ் பண்றாங்க. வாழைக்காய் மீன் வருவல் மாதிரி பண்றது. கண்ணுக்கு முதல்ல நிறைவு கொடுத்து அதுக்கப்புறம் மனதையும் வயிற்றியும் நிறைவுபடுத்துவதற்கு தான் இந்த மாதிரி வெஜிடேரியன் ஃபுட் வந்து நான்வெஜ் ஸ்டைல செய்து தராங்க.  வாங்க வெஜ் லாலிபாப் எப்படி பண்ணலாம்னு தெரிஞ்சிக்கலாம்.

வெஜ் லாலிபாப் | Veg Lolipop Recipe In Tamil

Print Recipe
சிக்கன் லாலிபாப் எப்படி இருக்குமோ அதே போல் இந்த வெஜிடபிள் லாலிபாப்புக்கும் சிக்கன் லாலி பப்புக்கு எந்த ஒரு வித்தியாசமும் பாக்க முடியாத அளவுக்கு தத்து ரூபா ரூபமா செஞ்சு நம்ம கொடுக்கப் போறோம். சிக்கன் பிரியர்களுக்கு இது என்னடா
Advertisement
புரட்டாசி மாதத்தில் நம்ம வீட்ல சிக்கன் செஞ்சு கொடுத்திருக்காங்க குழப்பம் அடைந்து அப்புறம் சாப்பிட்டு  இதுசிக்கன் லாலிபாப் விட ரொம்பவே அருமையாக இருக்கிறது அப்படின்னு சொல்லி இன்னும் கேட்ட கேட்டு வாங்கி சாப்பிடுற அளவுக்கு எந்த சிக்கன் லாலிபாப் நம்ம செய்ய போறோம். அது வெஜிடேரியன்ல செய்ய போறோம்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Veg Lolipop
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 240

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 4 உருளைக்கிழங்கு
  • 1 துருவிய கேரட்
  • 1/2 நறுக்கிய குடைமிளகாய்
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 50 கிராம் துருவிய பன்னீர்
  • 1 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டீஸ்பூன் பிரட் தூள்
  • கொத்தமல்லி தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

லாலிபாப் மேல் பூசுவதற்கு

  • 1 டீஸ்பூன்  சோள மாவு
  • 1 டீஸ்பூன்  மைதா மாவு
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை மிளகு தூள்
  • தண்ணீர் தேவையான அளவு
  • 2 கப் பிரட் தூள்
  • 6 குச்சிகள்

பொரிப்பதற்கு

  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் உருளைகிழங்கை வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.
  • மசித்து உருளைகிழங்கில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய  குடைமிளகாய்,பொடியாக  நறுக்கிய  வெங்காயம்சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.பிறகு துருவிய பன்னீர் , மிளகாய்தூள், மிளகுதூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பின் கொத்தமல்லி , பிரட் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.பிசைந்து வைத்துள்ள லாலிபாப் கலவையை குச்சிகளில் சிக்கன் கால் போன்ற வடிவில் செட் செய்து கொள்ள வேண்டும்.
  • ஒரு சிறிய பாத்திரத்தில் சோளமாவு, மைதாமாவு, மிளகுதூள், உப்பு , தண்ணீர் சேர்த்து தோசைமாவு  பதத்திற்குகலந்து கொள்ள வேண்டும். பின் செய்து வைத்துள்ள வெஜ் லாலிபாப் மேல் ஸ்பூனால் எடுத்து அனைத்து பக்கமும் படும் படி ஊற்ற வேண்டும்.
     
  • ஒரு ப்ளேட்டில் பிரட் தூளை கொட்டி அதில்  வெஜ்லாலிபாப்புகளை மெதுவாக எல்லா பக்கங்களிலும் படுமாறு பிரட்டி எடுத்து வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்துள்ள லாலிபாப்புகளை பொரித்து. எடுக்கவும்.
  • ஒரு பிளேட்டில் வெஜ் லாலிபாப்புகளை  சூடாகஎடுத்து வைத்து தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். இதோ சூடான சுவையான சத்து மிக்கவெஜ் லாலிபாப் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

9 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

16 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago