Advertisement
சைவம்

இரவு உணவுக்கு வெஜிடபுள் சப்பாத்தி ஒருமுறை இப்படி செய்து பாருங்க! பின் அடிக்கடி உங்கள் வீட்டில் இதுதான் உணவு!

Advertisement

சப்பாத்தி என்றாலே ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவார்கள், ஒரு சிலர் தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள். சப்பாத்தி வகைகளில் ஏராளமான வகைகள் இருந்தாலும் ‘வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தி’ மிகவும் அருமையாக இருக்கும். அதாவது சப்பாத்திக்கு எந்த சைட்டிஷூம் இல்லாமல் சப்பாத்திக்குள் எதையாவது ஒளித்து வைத்துக் கொடுத்தால் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். வெறும் சப்பாத்தியை விட இதுபோன்ற ஸ்டஃப்டு சப்பாத்திகள் பெரும்பாலானோர் விரும்பும் வகையறாக்களில் ஒன்று.

இப்போது நாம் குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடும் சில பொருட்களை சப்பாத்திக்க்குள் ஒளித்து வைத்து அட்டகாசமான வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தி வித்யாசமான முறையில் எப்படி செய்யலாம் என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.சப்பாத்தி பூரி என்பது பலரது வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு உணவு வகை தான். என்றாலும் சப்பாத்தி செய்து அதனுடன் தொட்டுக்கொள்ள சென்னா மசாலா, உருளைக்கிழங்கு மசாலா மற்றும் தக்காளி தொக்கு இதுபோன்ற சைடிஷ் தான் அடிக்கடி செய்வதுண்டு.

Advertisement

பெரிய அளவில் சைடிஷ் எதுவும் செய்யாமல் இந்த வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தியை செய்து கொடுத்தால் போதும். குழந்தைகள் அழகாக சாப்பிட்டு முடிப்பார்கள். இதன் சுவையும் வாயில் வைத்த உடனே கிரிஸ்பியாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு இது எப்பொழுதும் செய்யும் சப்பாத்தியை விட மிகவும் பிடித்தமானதாக இருக்கும். ஒரு முறை இதனை செய்து கொடுத்து பாருங்கள். மீண்டும் அடிக்கடி செய்து கொண்டே இருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் பள்ளி செல்லும் போது காலையில் இதனை சட்டென செய்து அவர்களின் லஞ்ச் பாக்சில் வைக்க முடியும். வாருங்கள் இந்த வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தியை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தி | Veg Stuffed Chappathi Recipe In Tamil

Advertisement
Print Recipe
சப்பாத்தி பூரி என்பது பலரது வீட்டில் அடிக்கடிசெய்யும் ஒரு உணவு வகை தான். என்றாலும் சப்பாத்தி செய்து அதனுடன் தொட்டுக்கொள்ள சென்னாமசாலா, உருளைக்கிழங்கு மசாலா மற்றும் தக்காளி தொக்கு இதுபோன்ற சைடிஷ் தான் அடிக்கடிசெய்வதுண்டு. ஆனால் பெரிய அளவில் சைடிஷ் எதுவும் செய்யாமல் இந்த வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தியை செய்து கொடுத்தால் போதும். குழந்தைகள் அழகாக
Advertisement
சாப்பிட்டு முடிப்பார்கள். ஒரு முறை இதனை செய்து கொடுத்துபாருங்கள். மீண்டும் அடிக்கடி செய்து கொண்டே இருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் பள்ளி செல்லும் போது காலையில் இதனை சட்டென செய்து அவர்களின் லஞ்ச் பாக்சில் வைக்க முடியும்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Veg Stuffed Chappathi
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 0.285

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 2 கப் கோதுமை மாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 முள்ளங்கி
  • 1 காரட்
  • 1/2 குடைமிளகாய்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1/2 தேக்கரண்டி உப்பு

Instructions

  • முள்ளங்கி,காரட் இரண்டையும் துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், குடை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்குடன் வெங்காயம், முள்ளங்கி, காரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்.
  • கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து ஒரு உருண்டை மாவை எடுத்து கட்டையில் வைத்து சப்பாத்தியாக இடவும்.
  • அதில் செய்து வைத்திருக்கும் மசாலாவை வைத்து நான்கு புறமும் மூடி மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் தடவி வெந்ததும் எடுக்கவும்.
  • சுவையான வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.

Notes

இதை மாலை நேர சிற்றுண்டியாக சாஸுடன் பரிமாறலாம்

Nutrition

Serving: 1nos | Calories: 0.285kcal | Carbohydrates: 0.285g | Protein: 12.2g | Fat: 10.4g | Sugar: 3.8g
Advertisement
Prem Kumar

Recent Posts

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

4 மணி நேரங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

4 மணி நேரங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

4 மணி நேரங்கள் ago

சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 09 மே 2024!

மேஷம் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும்…

8 மணி நேரங்கள் ago

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

17 மணி நேரங்கள் ago