- Advertisement -
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான வெண்டைக்காய் மப்பஸ் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : காரசாரமான வெண்டைக்காய் புளிக்கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!
- Advertisement -
இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த வெண்டைக்காய் மப்பஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
வெண்டைக்காய் மப்பஸ் | Vendaikkai Mappas Recipe in Tamil
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான வெண்டைக்காய் மப்பஸ் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Yield: 4 People
Calories: 649kcal
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 11 வெண்டைக்காய்
- 1 tsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 3 பச்சை மிளகாய்
- 11 கருவேப்பிலை
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 1 tsp மஞ்சள் தூள்
- 1 tsp மிளகாய் தூள்
- 1 tsp மிளகுத்தூள்
- 1 cup தேங்காய் பால்
- தேவையான அளவு தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- வெண்டைக்காய் மப்பஸ் செய்ய முதலில் தேங்காய்ச் சில்லை மிக்ஸி ஜாரில் அடித்து தண்ணீர் சேர்த்து தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெண்டைக்காயை நன்றாக வதக்க வேண்டும். வெண்டைக்காய் வதங்கியவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- அதே கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து இஞ்சி, பூண்டு,சிறிது சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
- அதில் உப்பு சேர்த்து வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
- நன்றாக வதங்கியதும் வதக்கிய வெண்டைக்காயை சேர்க்க வேண்டும்.அதில் தண்ணீர் ஊற்றி வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
- கொதி வந்ததும் மிளகுத்தூளை சேர்க்க வேண்டும்.வேறு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெண்டைக்காய் கலவையில் போட வேண்டும்.
Nutrition
Serving: 450gm | Calories: 649kcal | Carbohydrates: 21g | Sodium: 345mg | Potassium: 254mg | Sugar: 6.6g | Calcium: 64mg